தற்போது ஆன்லைனில் பணம் செலுத்துவதற்கு இன்டர்நெட் பேங்கிங்
டெபிட் கார்டுகள், கிரடிட் கார்டுகள் ஆகிய வகைகளை பயன்படுத்தி
வருகிறோம். ஆனால் இவற்றை பயன்படுத்த ஒவ்வொரு முறையும் CVV, OTP
போன்றவற்றை அளிக்க வேண்டியிருக்கின்றது. இது கிராமப்புற மக்களுக்கு
பயன்படுத்த தடைக்கல்லாக இருக்கிறது என்பது நிதர்சனமான உண்மை.
பெருகி வரும் இன்றைய டிஜிட்டல் பயன்பாட்டில் இத்தகைய நடைமுறைகளை
குறைத்து அனைத்து வாடிக்கயைாளர்களும் பயன்படுத்தும் வண்ணம் PayUbiz 'onetab' என்ற பேமெண்ட் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது குறித்து payUbiz நிறுவனத்தின் தலைவர் கூறுகையில் நாங்கள் தான் முதன் முறையாக இந்த onetab
வசதியை அறிமுகப்படுத்தவிருக்கிறோம். இந்த வசதியின் காரணமாக இணைய
விற்பனை நிறுவனங்களுக்கு பேமெண்ட் எளிமையானதாகவும்
குறைபாடுகளற்றதாகவும் இருக்கும் என்கிறார்.
இந்த சேவையை பயன்படுத்த முதலில் உங்கள் கிரடிட்/டெபிட் கார்டினை பதிவு
செய்து கொள்ள வேண்டும். பேமெண்ட் செய்யும்போது ஒவ்வொரு
முறையும் CVV-னை அளிக்க வேண்டாம். உங்கள் மொபைல்-க்கு வரும் OTP னை
Automatic ஆக எடுத்துக் கொண்டு Payment னை complete செய்து
கொள்ளும்.
அது போல் Payment னை செயல்படுத்தும் போது இடையில் Network Issue ல்
குறைபாடு ஏற்படும் போது அதனை மீட்டு எடுத்து பேமெண்டினை Success
செய்யும் வகையில்அமைக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்.