பருவ கால மாற்றங்கள் நம் உடலில் சில குறிப்பிடும்படியான மாற்றங்களை ஏற்படுத்தும். குறிப்பாக மழைக்காலம் வந்தாலே பல்வேறு நோய்த் தொல்லைகள் வந்து விடும். மரத்துப்போன மூட்டு இணைப்பில் நடுக்கத்துடன் கால்தாங்கலாக நடக்க வேண்டிய நிலையும் மழைக்காலத்தில் வரும் மோசமான உடல் பாதிப்பாகும்.
உடலில் ரத்த வெள்ளையணுக்கள் நோய் எதிர்ப்பு சக்திக்கு அரணாக இருக்கின்றன. நோய் எதிர்ப்பு செல்கள், நீண்ட நேரம் உடல் செல்களுக்கும், தீங்கிழைக்கும் மற்ற பொருள்களுக்குமிடையேயான வேறுபாட்டை அறிவதில்லை. இதனால் அவை உடல் செல்களை தாக்க ஆரம்பிக்கின்றன. முழங்கால் மூட்டிலுள்ள சவ்வு இதனால் வீக்கமடைந்து விறைப்பு தன்மை அடைந்து சிவப்பாக மாறும். இவற்றுடன் மூட்டு வலியும் ஏற்படுகிறது. மோசமான நோய் பாதிப்பினால் சில நேரங்களில் மூட்டுகள் செயலிழந்து விடுகின்றன. இந்நேரத்தில் இந்நோய் ஒன்றுக்கு மேற்பட்ட மூட்டுகளைப் பாதிக்கிறது.
பெரும்பாலும் ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு இந்நோய் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. மனிதனுக்கு இயற்கையாகவே உற்பத்தியாகி வளரக் கூடியது நகம், முடி, மூட்டுகளுக்கு இடையே உள்ள சவ்வு. இவை மூன்றும் மனிதனின் வளர்ச்சிக்கு ஏற்ப வளரும் தன்மை உடையது. இதில் மிக முக்கிய பங்கு வகிக்கக் கூடியது சவ்வு. இது ஆயுர்வேதச் சொல்லில் ஆமா வாத்தா என்று அழைக்கப்படுகிறது. ஆமா என்றால் பித்தம். வாத்தா என்றால் வாயு என்றும் பொருள்படும்.
மூட்டு வலி வருவதற்கு மிக முக்கிய காரணம் மூட்டுகளுக்கு இடையே ஒரு வித எண்ணெய் திரவம் போன்ற ஒரு பொருள் இருக்கும். அவை மூட்டுகளின் செயல்பாடுகளுக்கு ஏற்ப அவையும் இணைந்து செயல்படும். இந்த வாயுவும், பித்தமும் ஒன்றோடு ஒன்று இணைந்து எண்ணெய் திரவம் போன்ற பொருளை அழித்துவிடும். இதன் காரணமாக மூட்டுகள் இரண்டும் ஒன்றுக்கொன்று உரசும். இதனால் மூட்டுகளுக்கிடையே தேய்மானம் ஏற்படுவதால் மனிதனுக்கு மிக கடுமையான மூட்டு வலி ஏற்படுகிறது. இந்த வலியில் இருந்து முழுமையாக விடுபடுவதற்கு பெரும்பாலானவர்கள் அப்போது சூழ்நிலையில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கு ஏதாவது தற்காலிக வலி நிவாரண மாத்திரைகளை உண்டு தப்பித்துக் கொள்கிறார்கள். இதன் காரணமாக கடுமையான மூட்டு வலியில் இருந்து முழுமையான நிவாரணம் அடைய அவர்களுக்கு தெரியவில்லை. அவர்கள் மூட்டு வலியை தொடர்ந்து அடையும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
வழி முறைகள்
இந்த கடுமையான மூட்டு வலியில் இருந்து முழு நிவாரணம் பெற முடியும். அதற்கு முழுமையான தீர்வு காண முடியும். இதற்கு நாம் செய்ய வேண்டியது என்னவெனில் ஆயுர் வேத சிகிச்சை மூலம் முழு நிவாரணம் பெற முடியும். தொடர்ச்சியாக 3 மாதம் முதல் 6 மாதம் வரை மருந்து வகைகளை உண்டு வந்தால் இந்த கடுமையான மூட்டு வலியில் இருந்து 100 சதவீதம் முழு நிவாரணம் பெறமுடியும். தேய்ந்த மூட்டு சவ்வை புதியதாக உருவாக்க முடியும்.
ஆயுர்வேத மருந்து வகைகள் புதிய சவ்வை உருவாக்க வழி செய்கிறது. ஆயுர்வேத மாத்திரை மருந்துகளால் எவ்வித பக்க விளைவுகள் இல்லை. இதை சாப்பிடும் போது எவ்வித பத்திய முறைகளும் இல்லை என்கிறார் மகாலிங்கபுரம் அப்பல்லோ ஆயுர்வேதிக் சென்டர் டாக்டர் மகேஸ்வரராவ்.
மூட்டு வலி ஏற்பட காரணங்கள்
* கால்மூட்டி அடிக்கடி அழுத்தத்திற்கு உட்படுவதால் முட்டியை சுற்றியுள்ள கப் வடிவிலான சவ்வு காயமடைவது.
* முட்டியின் முன்பகுதியில் வலியிருக்கும். மாடிப்படி ஏறி இறங்கும் போது மற்றும் சாயும் போது வலியின் தன்மை அதிகரிக்கும். ஓட்டப்பந்தய வீரர்கள் மற்றும் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு இவை ஏற்படும்.
* எலும்பில் உள்ள திசுக்கள் கிழிவது அல்லது உடைவது. இதனால் முட்டியின் உள், வெளி பகுதிகளில் வலி ஏற்படுத்தும்.
* சுளுக்கு, மூட்டுக்களை முறுக்குவதால் எலும்புகளை இணைக்கும் தசைநார்களில் ஏற்படும் சிறு சிறு காயங்கள்.
*முட்டியின் சிப்பி இட மாற்றம் அடைவது.
* மூட்டுகளில் நோய் தொற்றுவது.
* மூட்டுகளில் ஏற்படும் காயங்களால் முட்டியினுள் இரத்த கசிவு ஏற்பட்டு வலியை அதிகப்படுத்தும்.
* இடுப்பில் ஏற்படும் குறைபாடுகள் அல்லது கோளாறுகள். இதனால் இடுப்பில் வலி ஏற்படும். இந்த வலி முட்டிப் பகுதிகளில் உணரப்படும். இடுப்பிலிருந்து முட்டி பகுதிக்கு செல்லும் கயிறு போன்ற அமைப்பில் காயம் ஏற்படுதல்.
* அதிக குளிர்ச்சி மற்றும் வெப்பமான கால சூழலில் இருத்தல்.
*முட்டியின் சிப்பி இட மாற்றம் அடைவது.
* மூட்டுகளில் நோய் தொற்றுவது.
* மூட்டுகளில் ஏற்படும் காயங்களால் முட்டியினுள் இரத்த கசிவு ஏற்பட்டு வலியை அதிகப்படுத்தும்.
* இடுப்பில் ஏற்படும் குறைபாடுகள் அல்லது கோளாறுகள். இதனால் இடுப்பில் வலி ஏற்படும். இந்த வலி முட்டிப் பகுதிகளில் உணரப்படும். இடுப்பிலிருந்து முட்டி பகுதிக்கு செல்லும் கயிறு போன்ற அமைப்பில் காயம் ஏற்படுதல்.
* அதிக குளிர்ச்சி மற்றும் வெப்பமான கால சூழலில் இருத்தல்.
* குறிப்பிட்ட காலத்தில் மூட்டு இணைப்பு சவ்வு வளராமை மற்றும் சாதாரணமாக முழங்கால் மூட்டுகள் மீது போர்த்தப்படாமை.
* வழக்கத்திற்கு மாறாக அதிக உடல் எடை அதிகரிப்பு.
* மோசமான உடல் பாதிப்பு மற்றும் நீண்ட நாள் நோய் வாய்ப்பட்டிருத்தல்.
* ஏதாவதொரு எலும்பு மூட்டு தசையில் ரத்தம் உறைந்து விடு தல்.
*மூட்டு நோய்களை சாதாரணமாக வரும் வலியை வைத்து கண்டறியலாம். காலையில் விழிக்கும் போது அதிகவலியுடன் விறைப்புதன்மை உடலிலிருந்தால் அதை நோய்அறிகுறி என அறியலாம். வயதானவர்கள் இதனால் அதிகம் இயங்க முடியாது. குளிர் காலங்களில் உடற்பயிற்சி மற்றும் நடக்கும் போது அதிக வலி ஏற்பட்டால் அது நோய் அறிகுறியாகும்.
* வழக்கத்திற்கு மாறாக அதிக உடல் எடை அதிகரிப்பு.
* மோசமான உடல் பாதிப்பு மற்றும் நீண்ட நாள் நோய் வாய்ப்பட்டிருத்தல்.
* ஏதாவதொரு எலும்பு மூட்டு தசையில் ரத்தம் உறைந்து விடு தல்.
*மூட்டு நோய்களை சாதாரணமாக வரும் வலியை வைத்து கண்டறியலாம். காலையில் விழிக்கும் போது அதிகவலியுடன் விறைப்புதன்மை உடலிலிருந்தால் அதை நோய்அறிகுறி என அறியலாம். வயதானவர்கள் இதனால் அதிகம் இயங்க முடியாது. குளிர் காலங்களில் உடற்பயிற்சி மற்றும் நடக்கும் போது அதிக வலி ஏற்பட்டால் அது நோய் அறிகுறியாகும்.
வலியைக் குறைக்க உதவும் வழிகள்
வலியை அதிகப்படுத்தும் செயல்களை தவிர்த்து (உதாரணம்- பழுதூக்குதல்) ஓய்வாக இருந்தல். வலி ஏற்படும் இடத்தில் ஐஸ் கட்டிகளை வைக்கலாம். முதல் நாளில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 15 நிமிடங்கள் வரை ஐஸ் கட்டிகளை வைக்கவும். முதல் நாளுக்குப்பின் குறைந்தது ஒரு நாளில் நான்கு முறையாவது இப்படி செய்ய வேண்டும்.
கால் முட்டியினை முடிந்தவரை உயரமாக தூக்குவதனால் வீக்கங்களை குறைக்கலாம். முட்டிகளின் கீழ் அல்லது இடையில் தலையணைகளை வைத்து உறங்கலாம்.
சுடு தண்ணீரில் 2 கிராம் உலர்ந்த இஞ்சியை கலந்து குடித்தல் மற்றும் மோர் உட்கொள்ளுதல் கபம் மற்றும் வாதத்தைக் குறைக்கும். இது செரிமான சக்தியை அதிகரிக்க உதவுவதோடு, மூட்டு இணைப்புகளின் வீக்கத்தைக் குறைக்கிறது.
சுரைக்காய் போன்று கொடியில் காய்க்கும் கசப்பு காய்கள், வாடாமல்லிகை இலைகள், வேப்பிலைகள், பாகற்காய், கோதுமையில் தயாரிக்கப்பட்ட சப்பாத்தியுடன் பார்லி சேர்த்த உணவு பொருள், ஸ்டார்ச் நீக்கப்பட்ட அரிசி சோறு, கொள்ளு, பியஸ் ஆகியவை உணவு பொருள்களில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பால், தயிர், பன்னீர், பாலாடையுடன் கூடிய கரும்புச் சாறு குறிப்பாக வெல்லம், சர்க்கரை, பருப்பு, மீன் மற்றும் நறுமணப் பொருள் கொண்ட பொருள்களை உட்கொள்ள வேண்டும். தினமும் உடற்பயிற்சி (வாரத்தில் 4 நாள்களுக்கு 30-லிருந்து 40 நிமிடம் வரை நடக்க வேண்டும்) செய்தல் அவசியம். தினசரி வாழ்க்கையில் யோகா மேற்கொள்ள வேண்டும்.
ஒரு மேசை கரண்டியில் ஆயில், ஒரு மேசை கரண்டி மாட்டு நெய், அரை மேசைகரண்டி இஞ்சி சாறு, அரை மேசை கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் சிறிதளவு கரும்பு சாறு ஆகியவை சேர்ந்த கலவை வாதத்தைக் குறைக்க உதவுவதோடு, எலும்பு மூட்டு இணைப்பில் வீக்கத்தையும் குறைக்கிறது.
இதற்கு மாற்றாக வெதுவெதுப்பான பாலுடன் ஒரு மேசை கரண்டி விளக்கெண்ணெய் கலந்து இரவில் குடிப்பதால் அதிக செரிமானத்தையும், வாதத்தையும் குறைக்கலாம்.
5 கிராம் இஞ்சி கூழுடன் கூடிய ரோஸ்ட், சீரகம், கல் உப்பு, கருப்பு உப்பு, உலர்ந்த இஞ்சி பவுடர் மற்றும் கருப்பு மிளகு ஆகியவற்றை வெண்ணெயுடன் சேர்த்து உட்கொள்ளுவதால் மூட்டு வலி மற்றும் முதுகு வலி ஆகியவற்றை வெகுவாகக் குறைக்கிறது. போதுமான நெய் அல்லது எண்ணெய் சேர்த்து உணவு சமைக்கப்பட வேண்டும்.
பால், சோறு, மட்டன் சூப் மற்றும் இனிப்பு, புளிப்பு அல்லது உப்பு நிறைந்த சத்தான உணவுப் பொருள்களை உட்கொள்ள வேண்டும்.
மூட்டு வலி, முழங்கால் வலி, குருக்கு வலிநீங்க சில யோசனைகள்
மூட்டுவலிநீங்க முடக்கத்தான் கீரையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மூட்டுவலி குணமாகும். ஆரம்பம் என்றால் உடனே குணம் கிடைக்கும். நாள்பட்ட வலி என்றால் கண்டிப்பாக 40 நாட்கள் சாப்பிட வேண்டும். வலியிலிருந்து விடுபடுவது உறுதி.
முடக்கத்தான் கீரையில் உள்ள காய், இலைகளைப் பறித்து நன்கு சுத்தம் செய்து, கழுவி அரைத்து வைத்துக் கொள்ளலாம். குளிர்சாதனப் பெட்டியில்வைத்துக் கொண்டு தினமும் காலையில் வெறும் வயிற்றில் 1 தேக்கரண்டி சாப்பிடலாம்.
சுத்தம் செய்தபின் தண்ணீர் வடியும் வரை நிழலில் விரித்து காய வைத்து, மாவாக்கிக் கொள்ளவும். இதை போத்தலில்அடைத்து வைத்துக் கொள்ளவும்.தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் குணமாகும். நன்றாக குணமான பிறகு, வாரம் 3 முறை முடக்கத்தான் கீரையை உட் கொண்டால் மீண்டும் வலி வராது.
தோசை மாவிலும் முடக்கத்தான் கீரையைக் கலந்து தோசை செய்து சாப்பிடலாம். நம் முன்னோர்கள் வாரம் 2 அல்லது 3 நாட்கள் முடக்கத்தான் கீரை தோசை சாப்பிடுவார்கள். நாமும் அதைக் கடைப் பிடித்தால் நமக்கு மூட்டு வலிகள் வராது.
குறுக்கு வலி நீங்க
நல்லெண்ணெய்யை வலிக்கும் இடத்தில் தேய்த்துவிட்டால் குறுக்கு வலி குணமாகும். யோகாசனங்களில் தனுராசனம் என்ற ஆசனம் இருக்கிறது. இந்த தனுராசனம் செய்யும் பயிற்சியை பழகிக்கொள்ள வேண்டும். இது குறுக்கு வலியை குணப்படுத்தும்.
நல்லெண்ணெய்யை சூடாக்கி, சூடேறியதும் இதில் 10 பல் பூண்டுகளைப் போட்டு, பூண்டுகள் சிவந்ததும் இறக்கி ஆறவைத்துக் கொள்ளவும். இந்த எண்ணெய்யை வலிக்கின்ற இடத்தில் நன்றாக தேய்த்துவிட வேண்டும். 3 மணி நேரம் கழித்து, வெந்நீரில் குளிக்க வேண்டும். இவ்விதம் 15 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால் குறுக்குவலி குணமாகும்.
தினமும் காலையில் வெறும் வயிற்றில் 2 அல்லது 3 பூண்டுகளை சாப்பிட்டு வந்தால் குணமாகும். எலுமிச்சைச் சாற்றில் சிறிது உப்பு போட்டு தினமும் குடித்து வந்தால் குணமாகும். பச்சை உருளைக்கிழங்கை சாப்பிட்டு வர வேண்டும்.
வலிக்கும் இடத்தில் பச்சை உருளைக் கிழங்கை அரைத்துப் பற்று போடவேண்டும். குறுக்கு வலி அதிகமாக இருக்கும் நேரத்தில் கொழுப்புச் சத்துள்ள உணவுகளை தவிர்த்து, பச்சைக் காய்கறிகள், சாலட் சாப்பிடலாம். எண்ணெய் சேர்க்காமல் வேக வைத்த காய்கறிகளையும் சாப்பிடலாம்.
முழங்கால் வலி நீங்க
நல்லெண்ணெய்யை வலிக்கும் இடத்தில் தேய்த்து விட்டால் முழங்கால் வலி குணமாகும். பச்சை உருளைக் கிழங்கை 4 விரல்கள் அளவு சாப்பிட லாம். ஒரு சிறிய உருளைக்கிழங்கை கழுவி மிக்ஸியில் போட்டு சாறு எடுத்துக் குடிக்கலாம்.ஒரு உருளைக் கிழங்கை சாலட் செய்து சாப்பிடலாம்.
லச்சக்கொட்டைக் கீரையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் மூட்டுவலி, குறுக்கு வலி குணமாகும். இந்தக்கீரையை கழுவி, நறுக்கி, பருப்பு போட்டு பொரியல் செய்து சாப்பிடலாம். பொடியாக நறுக்கி கொத்துக்கறியுடன் போட்டு சமைத்துச் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். மூட்டு வலிக்கு முட்டைக்கோஸ் சாற்றை அருந்தலாம். வலி ஏற்பட்டுள்ள மூட்டுக்களில் புதிய முட்டைக்கோஸ் இலைகளை அரைத்துப் பற்றுப் போடலாம்.
காலில் வீக்கம் நீங்க
நல்லெண்ணெய்யை வலிக்கும் இடத்தில் தேய்த்து விட்டால் காலில் வீக்கம் குணமாகும். தூதுவளை இலைகளையும், நற்சுங்கள் இலைகளையும் எடுத்து, சிறிது தண்ணீர் விட்டு அரைத்து அரைத்த விழுதை எடுத்து சுண்டக்காய் அளவில் மாத்திரை போல் செய்து நிழலில் உலர்த்தி ஒரு பாட்டிலில் சேமித்து வைத்துக் கொள்ளவும். 3 மாத்திரைகளை 1 டம்ளர் பசும்பாலில் கரைத்து, இத்துடன் கற்கண்டு சேர்த்து 1 வாரம் வரை 2 வேளைகள் குடிக்க வேண்டும். இவ்விதம் செய்தால் கால் வீக்கம் குணமாகும்
கருத்துகள்
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்.