Trace mobile number
தெரியாத மொபைல் நம்பரில் இருந்து போன்கால்கள் வந்தால் கண்டு பிடிக்க எளிய வழிமுறைகள்!
தெரியாத மொபைல் எண்களில் இருந்து அடுத்தடுத்து போன்கால்கள் வருவது
வாடிக்கையான ஒன்றாகிவி்ட்டது.இதற்கு அதிகபட்சம் நாம் செய்வது ‘சாரி, ராங்
நம்பர்’ என்று சொல்வதாகத் தான் இருக்கிறது. அப்படியும் அடிக்கடி போன்கள்
வந்தால் அந்த நம்பரில் இருந்து வரும் போது கட் செய்வது. இதையும் மீறி அதிக
தடவை தெரியாத மொபைல் நம்பரில் இருந்து போன்கால்கள் வந்தால் அதற்குரிய
நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம். ஆனால் மொபைல் நம்பர்களை ட்ரேஸ் செய்ய ஒரு
எளிய வழி உள்ளது.
மொபைல் நம்பரை ட்ரேஸ் செய்ய நிறைய வலைத்தளங்கள் உள்ளன. உதாரணத்திற்கு
மொபைல் டிரெக்ட்ரி இன்டியா என்ற வலைத்தளத்திற்குள் நுழைய வேண்டும். இதில்
ட்ரேஸ் மொபைல் நம்பர், ட்ரேஸ் ஐபி அட்ரஸ், ட்ரேஸ் வெகிக்கல் நம்பர், ட்ரேஸ்
லேண்டுலைன் நம்பர் என்று பல வசதிகள் கொடுக்கப்பட்டிருக்கும்.
இதில் ட்ரேஸ் மொபைல் நம்பர் என்ற வசதியை க்ளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு
ஒரு விண்டோ திறக்கப்படும். அந்த விண்டோவில் டைப் மொபைல் நம்பர் என்ற
கேட்கப்படும். இதில் எந்த மொபைல் நம்பரில் இருந்து போன்கால் வருகிறதோ அந்த
மொபைல் எண்ணை டைப் செய்ய வேண்டும். பிறகு சமர்ப்பிக்க (சப்மிட்) வேண்டும்.
இப்படி செய்தால் நாம் டைப் செய்த மொபைல் எண் எந்த தொலை தொடர்பு சேவை
கொண்டது, ஜிஎஸ்எம் அல்லது சிடிஎம்ஏ மற்றும் எந்த இடம் என்பது போன்ற
தகவல்களை எளிதாக பெறலாம்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை படித்த பின் இதை நீங்களும் செயல்படுத்தி பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
கருத்துகள்
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்.