ஒரு பணக்கார மாணவன் காலையில் நடைப்பயணம் செய்துக்கொண்டிருக்கும்பொழுது வழியில் அவனுடைய ஆசிரியரை கண்டான். இருவரும் உரையாடிக்கொண்டே அவர்களுடைய நடை பயணத்தை தொடர்ந்தனர்.
செல்லும் வழியில் ஒரு பழைய சட்டையும் ,காலனியும் மற்ற துணிகளையும் கண்டனர். அந்த மாணவன் ஆசிரியரிடம் அந்த ஆடைகள் இங்குள்ள வயல்வெளியில் வேலை செய்பவர்களுடையதாகஇருக்கும் என்றான்.
அந்த சிறுவன் அந்த ஆடைகளை ஒளித்து வைத்து விளையாட முடிவெடுத்து ஆசிரியரிடம் கூறினான் அதற்கு ஆசிரியார் மற்றவர்களை துன்பப்படுத்தி அதில் நீ சந்தோசம் காண்பது ஒரு நல்ல மனிதனுக்கு அழகல்ல. விளையாடிற்க்குகூட மற்றவர்கள் நம்மால் துன்பப் படக்கூடாது என்று ஆசிரியர் கூறினார். நீ அவர்களிடம் விளையாடவேண்டும் என்று முடிவெடுத்து விட்டாய் எனவே நான் சொல்வதைபோல் விளையாடு என்று கூறினார். நீ பணக்கார மாணவன் தானே உண் கைகளில் அணிந்திருக்கும் இந்த மோதிரத்தை நீ அவர்களுக்கு கொடுக்க மனம் இருந்தால் அந்த விவசாயியின் பழைய சட்டை பையில் இந்த மோதிரத்தை வைத்துவிட்டு ஒளிந்திருந்து நடப்பவற்றை பார் என்றார்.
அந்த மாணவனும் அவ்வாறே செய்தான். ஒரு வயதான விவசாயி அவருடைய ஆடையை எடுத்து அணியும் போது அவருடைய சட்டை பையில் இருந்த மோதிரத்தை கண்டார் பிறகு சுற்றி சுற்றி பார்த்தார் அவர் கண்களுக்கு யாருமே தென்படவில்லை உடனே கதரி அழ ஆரம்பித்தார் இறைவனே என் மனைவி நோய்வாய்பட்டு வீட்டில் இருக்கிறாள் அவளை குணப்படுத்த என்ன வழி என்று உண்னிடம் புலம்பினேன் யாரோ ஒரு நல்லவர் மூலமாக இந்த தங்க மோதிரத்தை எனக்கு அனுப்பி வைத்துவிட்டாயே உணக்கும் இந்த மோத்திரத்தை வைத்துவிட்டு சென்ற அந்த நல்ல மனிதருக்கும் நன்றி என்று கூறிவிட்டு. என் மனைவியை குணப்படுத்த இது போதும் இறைவா என்று அந்த முதியவர் அழுதார் அதை பார்த்த அந்த மாணவன் மெய்சிலிர்த்து அவன் கண்களில் நீர் ஒடியது. ஆசிரியர் மாணவனை பார்த்து நீ சொல்வதுபோல் செய்திருந்தால் மனவருத்தம்தான் மிஞ்சியிருக்கும் இந்த விளையாட்டால் உன் மனம் பேரானந்தத்திற்கு உள்ளாகியுள்ளது. அந்த மாணவனும் இனி என்மனதால் கூட மற்றவர்களுக்கு தீங்கு நினைக்கமாட்டேன் என்று உறுதி கூறினான்.
கருத்துகள்
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்.