வில்வம் விலா மரத்தின் வகையை சேர்ந்தது. இதனுடைய காய்கள் மற்றும் இலைகள் விலா மரத்தின் அமைப்பையே பெற்று இருக்கிறது.விலா பழம் இனிப்பு சுவையை உடையது வில்வ பழம் சிறு கசப்போடு கூடிய இனிப்பு சுவையுடையது
வில்வத்தின் இலைகள் ,காய்கள்,பட்டைகள் மற்றும் வேர்கள் அனைத்தும் மருந்தாக பயன்படுகிறது. அதாவது இதன் அடி வேர் முதல் உச்சி துளிர் வரை மருந்தாக பயன்படுகிறது. இந்த மரத்தின் பிசினும் மருந்தாக பயன்படுகிறதாம். நம் முன்னோர்கள் இதைனை சிவனுக்குரிய பிரசதாமாக அனைத்து சிவ ஆலையங்களிலும் பயன்படுத்துகின்றனர். மறைமுகமாக மக்களுக்கு கொடுத்து ஆரோக்கியமான வாழ்கையை அளித்தனர். இதனுடைய தாவரவியல் பெயர் ஏகில் மார்மெலோசு (Aegle Marmelos)
இதற்கு பூவிலம் என்று தமிழிலே மற்றொரு பெயரும் உண்டு. இதை வில்வம் என்று அனைத்து மொழிகளிலும் சொல்வதுண்டு. இதில் மினரல்ஸ் , வைட்டமினகள், அமினோ அசிட்ஸ் என்று பல சத்துக்ளை அடக்கியுள்ளது. இது உள்உறுப்புகளை தூண்டக்கூடியது. வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தக்கூடியது, இது புற்று நோயை தடுக்கம் மருந்தாக பயன்படுகிறது.
மெட்ராஸ் ஐ என்று சொல்லக்கூடிய கண் நோய்க்கு இந்த வில்வத்தின் துளிர்கள் பயன்படுகிறது. வில்வ இலையின் துளிர்களை ஒரு கைபிடி எடுத்துக்கொண்டு அதை ஒரு இரும்பு கடையில் வாட்டி. வாட்டிய இலைகளை ஒரு துணியில் கட்டி சுடு பொருக்கும் அளவுக்கு கண்ணில் ஒத்தடம் கொடுக்க வேண்டும். இது கண் நோய்க்கு மட்டும் அல்ல மூட்டு வலிகளுக்கும் இந்த ஒத்தடம் பயன்படுகிறது. மேலும் தெளிவான மற்றும் செயமுறை விபரங்களுக்கு கீழ் காணும் காணொலியை பார்க்கவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்.