ஆதாரபூர்வமான நிகழ்வுகள்

கனவும் மனமும் ஓர் அதிசயம் ஆனால் உண்மை – Part 1

கனவுகள் நம் வாழ்வில் இடம் பிடிக்க தவறியதே இல்லை. சிறுவயது முதல் முதிர்வயது வரை அனைவருக்கும் கனவுகள் வரும். கனவிலும் நல்ல கனவு கெட்ட கனவு என்று உண்டு. கனவு காணுங்கள் என்றார் அப்துல் கலாம்.


கனவைப் பற்றி நாம் ஏன் அறிந்துகொள்ள வேண்டும்? கனவு காண்பதால் ஏற்படும் நன்மைகள் என்ன? தீமைகள் என்ன? கனவுகள் பலிக்குமா? கனவுகள் என்பது வெறும் கற்பனையா?
கனவுகளை திரும்ப நினைவுபடுத்தி பார்க்க முடியுமா? இப்படிப்பட்ட கேள்விகளுக்கு இந்த தொடரில் உங்களுக்கு விடை கிடைக்கும். தொடரை தொடங்கும் முன் ஒரு சம்பவத்தை பார்ப்போம்.

ஏப்ரல் 1865ஆம் ஆண்டு வாக்கில் அமெரிக்க ஜனாதிபதி ஆப்ரஹாம் லிங்கன் எழுதியது.
பத்து நாட்களுக்கு முன் மிகவும் முக்கியமான வேலைகளின் காரணமாக, நான் மிகவும் தாமதமாக படுக்கைக்கு சென்றேன். மிகுந்த களைப்பின் காரணமாக எனக்கு சரியாக உடனே தூங்கி விட்டேன். அன்று எனக்கு ஒரு கனவு வந்தது.
அங்கே மரண அமைதி இருந்தது. பிறகு நான் விசும்பல்களை கேட்டேன், பலர் அழுது கொண்டிருந்தனர். நான் என் படுக்கையிலிருந்து எழுந்து படிகளில் கீழே இறங்கி வந்தேன் என நினைக்கிறேன். அங்கே அதே அழுகையால் அமைதி கலைந்தது. ஆனால் அழுபவர்களை காண முடியவில்லை.
நான் ஒவ்வொரு அறையாக சென்றேன்; எங்கும் யாருமே தென்படவில்லை. எல்லா அறையிலும் விளக்குகள் எரிந்து கொண்டிருப்பதை நான் பார்த்தேன். எல்லா பொருட்களும் எனக்கு பழக்கப்பட்டவையாக இருந்தன. ஆனால் துக்கம் கொண்டாடும் அழுவும் நபர்கள் எங்கே? எனக்கு குழப்பமாகவும் அச்சமாகவும் இருந்தது. இதற்கு என்ன அர்த்தம்? நான் பார்த்த சூழ்நிலைகள் மிகவும் விசித்திரமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது.
எனக்கு அப்படித்தான் இருந்தது கிழக்குப் பக்க அறைக்கு செல்லும் வரை. நான் அந்த அறைக்குள் நுழைந்தேன். அங்கே நான் ஒரு ஆச்சரியத்தை கண்டேன். எனக்கு முன்னால் ஒரு சவப்பெட்டியை ஏற்றிச் செல்லும் வண்டி இருந்தது. அதன் மேல் ஈமச்சடங்களுக்கான உடையணியப்பட்ட ஒரு பிணம் இருந்தது. அதைச் சுற்றி படைவீரர்கள்
பாதுகாப்பாக நின்று கொண்டிருந்தணர். அங்கே கூட்டம் கூட்டமாக மக்கள் பிணத்தை பார்த்து அழுது கொண்டிருந்தனர். அந்த பிணத்தின் முகம் மூடப்பட்டிருந்தது. நான் ஒரு படைவீரனிடம் கேட்டேன் “யார் வெள்ளை மாளிகையில் இறந்து விட்டார்?” படைவீரன் பதில் சொன்னான் “ஜனாதிபதி”; “அவர் ஒருவனால் கொல்லப்பட்டார்”. பிறகு கூட்டத்திலிருந்து பெரும் அழுகை ஏற்பட்டது. நான் விழித்துக் கொண்டேன். நான் அன்று இரவு முழுவதும் தூங்கவே இல்லை. அது வெறும் கனவுதான் என்றபோதிலும், எனக்கு இதுவரை அதுதான் விநோதமாக தொல்லை தந்தது.
ஏப்ரல் 14 ஆப்ரகாம் லிங்கன் ஒருவனால் சுடப்பட்டார். அவருடைய உடல் மக்களின் பார்வைக்காக வெள்ளை மாளிகையின் கிழக்குப் பக்க அறையில் கிடத்தப்பட்டிருந்தது.
கனவும் மனமும் ஓர் அதிசயம் ஆனால் உண்மை – Part 2
கனவுகள் என்பவை உணர்வுகள், நினைவுகள், கோட்பாடுகள், மற்றும் விருப்பங்கள் ஆகியவற்றுடன் தொடர்புள்ளவை. கனவுகள் பற்றிய நம்பிக்கைகள் உலகம் முழுதும் உள்ளன. பல அமானுஷ்ய நம்பமுடியாத நிகழ்வுகள், நம்பிக்கைகள், அனுபவங்கள் கனவுகள் சார்ந்து ஏற்பட்டுள்ளன. கனவுகள் நம் வாழ்வுடன் ஒன்றிப்போனது. பல ஜீவராசிகள் கனவு காண்கின்றன. கனவு ஏன் காண வேண்டும். கனவு எப்போது, எப்படி உருவாகிறது என்பது பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம். அதற்கு முன் கனவை பற்றி அறிவதால் என்ன பயன்?
சில கனவுகள் நமக்கு ஏதோ ஒரு செய்தியை உணர்த்துகின்றன. அது நல்லதாகவும் இருக்கலாம், கெட்டதாகவும் இருக்கலாம். உங்கள் வாழ்நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கனவுகளை காண்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். அவை பகலிலும் காணப்பட்டிருக்கலாம், இரவிலும் காணப்பட்டிருக்கலாம். ஆனால் ஒரு குறிப்பிட்ட கனவு உங்களுக்கு முக்கியமானது என நீங்கள் எப்படி உணரலாம்?
கீழ்காணும் ஏழு காரணிகளில் எவையாவது உங்கள் சமீபத்திய ஒரு கனவுடன் ஒத்துப் போனால் அந்த கனவு உங்களுக்கு முக்கியமானதாக இருக்கலாம். ஒரு செக்லிஸ்ட் போல இதை ஒரு சமீபத்திய கனவுடன் பயன்படுத்தி பாருங்கள்.
1.பலமான உணர்வுகள். அந்த கனவு உங்களை உணர்வுரீதியாக பாதித்ததா?
உணர்வுகளுடன் வரும் கனவுகள் அவ்வப்போது தகவல்களுடன் இருக்கும். அவை நிலைகுலைய செய்தாலும், அவற்றை மிகவும் தெளிவாக புரிந்துகொள்ளும்படி இருக்கும், அதாவது அது சந்தோசமான கனவோ, பயங்கரமான கனவோ அதில் வரும் விஷயங்கள் தெளிவாக இருக்கும்.

2. தூண்டக்கூடிய உருவங்கள். கனவில் வந்த ஒரு உருவம் மிகவும் பயங்கரமாக, பயமுறுத்தும்படி இருந்ததா, அதனால் அதைப் பற்றி நினைப்பை உங்களால் தடுக்க முடியவில்லையா? இதைப் போன்ற தீவிரமான எண்ணங்கள் அதை மீண்டும் வேறொரு சமயம் நினைப்பதற்காக நம் நினைவாற்றலை தூண்டி விடுகிறது. இதனால் அந்த எண்ணங்கள்/பிம்பங்க:ள் அடிக்கடி மனதில் தோன்றுகின்றன.
3. மீண்டும் ஒரே கனவு அல்லது பிம்பங்கள் தோன்றுதல். அதாவது ஒரு கனவு அல்லது சம்பவம் அல்லது உருவம் ஏற்கனவே ஒருதடவை வந்திருந்தால், அதை ஒரு அறிகுறியாகக் கொள்ளலாம்.
4. அதைப் பற்றி நினைக்கவே முடியாது. உதாரணமாக nightmare எனப்படும் இரவில் ஏற்படும் சொல்ல முடியாத பயங்கர கணவுகள் நம்மிடம் எதையோ உணர்த்த முயற்சிக்கின்றன. அவற்றைப் பற்றி நினைத்துப் பார்க்க கஷ்டமாக இருந்தாலும் அவற்றை புரிந்துகொண்டால் உங்களுக்கு சரியாகிவிடும்.
5. உங்களுக்கு ஒரு மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கும் அல்லது மாற்றத்தை நோக்கி ஆழ்ந்து சிந்தித்து கொண்டிருப்பீர்கள். மாற்றம் என்றவுடன் திருமணம், வேலை அல்லது மற்றவற்றில் மாறுதல்களை கருத்தில் கொள்ள வேண்டாம். கனவில் வருபவற்றை உங்கள் உள்மனதிற்கு(ஆத்மா) என்றும் மாறாத வாழ்வின் அம்சங்களுடன் தொடர்புபடுத்தி பார்க்கலாம்.
6. அது உங்களை சுற்றிக் கொண்டே இருக்கும். சில கனவுகள் எளிதில் மறைந்துவிடாது. அவை நம் அன்றாட பணிகளை செய்யும்போது அவை நம்மை சுற்றி வாசனை போல ஒட்டிக் கொண்டிருக்கும். இப்படி நேர்ந்தால், உங்கள் ஆழ்மனது நீங்கள் அதை நினைக்க வேண்டும் எனவும் அது சொல்லும் செய்தியை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் எதிர்பார்க்கிறது.
7. அறிந்துகொள்ள ஆர்வமாய் இருத்தல். எல்லோரும் கனவிலிருந்து விழித்துக் கொண்டு உணர்வுரீதியாகவோ, அவர்கள் பார்த்த உருவங்களாலோ பாதிக்கப்படுவதில்லை. ஆனால் நீங்கள் உங்கள் கனவை பற்றி உண்மையாக அறிய ஆர்வம், ஆசை இருந்தால், அதுவும் ஒரு மதிப்புள்ள அறிகுறியாகும்.
மேற்கண்ட ஏழு காரணிகளில் ஏதாவது ஒன்றாவது உங்களோடு ஒத்துப்போனால், அக்கனவைப் பற்றி நீங்கள் அறிந்துகொள்வது அவசியம் ஏனெனில் அது சில உதவிகரமான உள்ளுணர்வுகளை கொண்டிருக்கலாம். இத்தொடரின்போது பலருக்கு ஏற்பட்ட பலவித கனவுகள் அவை சார்ந்த விசயங்களை ஆங்காங்கே சொல்கிறேன். மற்றவர்களின் கனவுகள், ஒரே மாதிரியான கனவுகள், அவை சொல்லும் செய்திகளை அறியும்பொழுது, அது உங்களுக்கு பலன்களை அளிக்கலாம்.
கனவும் மனமும் ஓர் அதிசயம் ஆனால் உண்மை – Part 3
ம் கனவை நம்மை தவிர வேறு ஒருவரால் மிகத் தெளிவாக புரிந்துகொள்ள முடியாது. நம் ஒவ்வொரு கனவும் நிச்சயம் நம்மிடம் எதையோ சொல்கிறது. எல்லாக் கனவுகளும் கெடுதலை உணர்த்துவதாக நினைக்க வேண்டாம். கனவுகள் நமக்கு நன்மை செய்யவே ஏற்படுகின்றன. நமக்கு பயத்தை ஏற்படுத்தும் கனவுகளை கூட தெளிவாக புரிந்துகொண்ட பின், பயப்பட மாட்டோம்.
கனவு நாம் ஏன் காண்கிறோம்?
நம் உள்ளுணர்வு நம்மிடம் எதையோ தெரிவிக்கிறது. அதை கனவின் மூலம் உணர்த்துகிறது. இதை நாம் தெளிவாக புரிந்துகொள்ள நம் மனதின் நிலைகளை அறிய வேண்டும் இதைப் பற்றி defense mechanisms பற்றி எழுதப்போகும் பதிவில் விளக்கமாக சொல்கிறேன்.
நாம் எப்போது கனவு காண்கிறோம்?
உலகில் அனைவரும் கனவு காண்கிறோம்! உங்கள் கனவு உங்களுக்கு நினைவிலில்லை என்பதால் கனவு காண்பதில்லை என அர்த்தமில்லை. அறிவியல் ஆய்வுகள் நாம் தூக்கத்தின் ஐந்தாம் நிலையான REM(Rapid Eye Movement) நிலையில் கனவு காண்பதாக தெரிவிக்கின்றன. இருப்பினும் metaphysician எனப்படும் தத்துவ அறிஞர்கள் ஒப்புக்கொள்வதில்லை. மேலும் தூக்கத்தின் மற்ற நிலைகளிலும் நாம் அரிதாக கனவு காண்பதை அறிவியல் ரீதியாகவும் நிரூபித்துள்ளனர். (தூக்க நிலைகள் பற்றி வேறு பதிவில் சொல்கிறேன்).

நாம் நம் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கை தூக்கத்திற்காக செலவழிக்கிறோம். சராசரி வாழ்நாளில் சுமார் 6 வருடங்களை கனவு காண்பதற்காக செலவழிக்கிறோம். அதாவது 2100க்கும் மேற்பட்ட நாட்களை வேறொரு உலகில் கழிக்கிறோம். ஒவ்வொரு இரவும், சராசரியாக ஒரிரு மணி நேரங்கள் கனவு காண்கிறோம் மேலும் வழக்கமாக ஒரு நாளில் 4-7 கனவு காண்கிறோம்.
கனவு பற்றி சுவாரசியமான தகவல்கள்:
கனவுகள் என்பவை இன்றியமையாதவை. கனவு பற்றாக்குறை என்றொரு விஷயம் உண்டு. அதாவது கனவு காண்பதில் குறைபாடு இருந்தால் அது புரதச் சத்து குறைபாடு அல்லது personality disorder எனப்படும் பண்பு ஒழுங்கின்மையை குறிக்கின்றது. ஆண்கள் மற்ற ஆண்களை பற்றி அதிகமாக கனவு காண்கிறார்கள். பெண்கள் ஆண்கள் மற்றும் பெண்கள் என சமமாக கனவு காண்கிறார்கள். புகைப்பழக்கம் இல்லாதவர்கள்/கைவிடுபவர்கள் நீண்ட மற்றும் ஆழமான கனவுகளை காண்கிறார்கள்.
3-4 வயது வரும் வரை குழந்தைகள் தங்களைப் பற்றி கனவு காண்பதில்லை. நீங்கள் குறட்டை விட்டு தூங்கும்போது கனவு காண்பதில்லை. கண் பார்வை அற்றோரும் கனவு காண்கிறார்கள். இடையில் கண்பார்வை இழந்தோர் அதற்கு முன் வரை பார்த்தவைகளை பற்றி கனவு காணலாம். மேலும் கனவு என்பது காட்சியை மட்டும் குறிக்காமல், ஒலிகள், தொடு உணர்வு மற்றும் வாசனை போன்ற மற்ற உணர்வுகளையும் சார்ந்து ஏற்படலாம்.
இன்னொரு சம்பவம் Life பத் திரிக்கையில் வெளியான உ ண்மை சம்பவம். இதனை வார ன் வீவர் என்ற கணித அறிஞர் தன் புத்தகம் ஒன்றிலும் குறிப் பிடுகிறார். அமெரிக் காவில் நெப்ராஸ்கா என்ற மாநிலத்தி ல் உள்ள Beatrice என்ற சிறிய நகரில் உள்ள ஒரு சர்ச்சில் 1950 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒன்றாம் தேதி 15 பாடகர்கள் சேர்ந்து கூட்டாக சரியாக கா லை 07.20 மணிக்குப் பாடுவதாக இருந்தது. ஆனால் அத்தனை பேரும் வேறு வேறு காரணங்களுக்கு சர்ச்சிற்கு வர அதிக தாமத மாகி விட்டது. ஒருத்தி ஒரு ரேடியோ நிகழ்ச்சியில் ஆழ்ந்து போய் கிள ம்பத் தாமதமானது. இன்னொ ருத்தி கணிதப்பாடம் எழுதி முடித்துக் கிளம்பத் தாமதமா னது. ஒருவருக்குக் காரை ஸ்டார்ட் செய்வதில் பிரச்சி னை…இப்படி ஒவ்வொருவரு க்கு ஒவ்வொரு காரணம். இவ ர்கள் சரியான நேரத்திற்குள் வந்து சேராததே இவர்களைக் காப்பாற்றியது என்பது தான் அதிசயச் செய்தி. காலை சரி யாக 07.25 க்கு வெடிகுண்டு வெடித்ததில் சர்ச் தரைமட்டமாகியது.
1900 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இத்தாலிய அரசர் உம்பர்டோ (King Umberto I) மோன்ஸா என்ற நகரில் ஒரு பெரிய ஓட்டலில் உணருந்தச் சென்ற போது அதிர்ச்சி அடைந்தார். காரணம் அந்த ஓட்டல் உரிமையாளர் அசப்பில் அவரைப் போலவே இருந்தது தான். அவரிடம் பேசிய போது மேலு ம் பல ஆச்சரியங்கள் அவருக்குக் காத்திருந்தன. அந்த ஓட்டல் உரிமையாளர் பெயரும் உம்பர் ட்டோ. இருவர் மனைவியர் பெயரு ம் மார்கரிட்டா. அந்த மன்னர் முடி சூட்டிய அதே நாளில் தான் அந்த ஓ ட்டல் உரிமையாளர் அந்த ஓட்ட லைத் துவக்கினார். இருவர் பிறந்த தும் ஒரே நாள் 14-03-1844. ஆச் சரியத்தோடு அந்த ஓட்டல் அதிபரு டன் பேசிக் கொண்டிருந்து விட்டு சென்ற மன்னர் ஒரு மாதம் கழித்து 29-07-1900 அன்று அந்த ஓட்ட ல் உரிமையாளர் ஒரு துப்பாக்கி சூட்டில் சற்று முன் தான் காலமா னார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டார். சில மணி நேரங்களில் மன்னரும் ஒரு வன்முறைக் கும்பலால் கொல்லப்பட்டார்.
ஹென்றி சீக்லேண்ட் (Henry Ziegland) என்பவன் 1883 ஆம் ஆண்டு தன் காதலியுடனான உறவை முறித்து க்கொண்டான். அக்காதலி மன உளைச் சலில் தற்கொலை செய்து கொள்ள அவளுடைய சகோதரர் கடும் கோப மடைந்து சீக்லேண்டைத் தேடிக் கண்டு பிடி த்து சுட்டு தானும் தற்கொலை செய்து கொண்டான். ஆனால் அதிர்ஷ்ட வசமாக சீக்லேண்ட் சாகவில்லை. அந் தத் துப்பாக்கிக் குண்டு முகத்தை உராய்சிக் கொண்டு சென்று அங்கி ருந்த மரத்தில் சென்று பதிந்தது. சில வருடங்கள் கழித்து அந்தப் பெரிய மரத்தை வெட்டி விட சீக்லேண்ட் நினைத்தான். ஆனால் அதை அவ்வளவு சுலபமா க வெட்டி விட முடியவில்லை. எனவே டைனமைட் குச்சிகளை வைத்து மரத்தைப் பிளக்க நினைத்தான். அப்படிச் செய்கையில் அந்த மரம் சுக்கு நூறாகி வெடிக்கையில் அந்தக் குண்டு சீக்லேண் டின் தலையில் பாய்ந்து அந்த இடத்திலே யே சீக்லேண்ட் மரணம் அடைந்தான். பல வருடங்கள் கழித்தும் அந்தக் குண்டு பழி தீர்த்துக் கொண்டது போல அல்லவா இருக்கி றது. இந்த இரு சம்பவங்களும் ரிப்ளியின் நம்பினால் நம்புங் கள் என்ற புத்தகங்களில் விவ ரிக்கப்ப ட்டுள்ளன.
Ohioவில் பிறந்த இரட்டையர் வாழ்க்கையின் ஆச்சரியமான குறிப் புகள் 1980 ஜனவரி மாத ரீடர்ஸ் டைஜஸ்டில் வெளி வந்துள்ளன. இருவரும் பிறந் தவுடனேயே பிரிக்கப்பட்டு இருவேறு தொலை தூரக் குடும்பங்களு க்குத் தத்துத் தரப்பட்டனர். இருகுடும்பங்களும் ஒன்றிற்கு ஒன்று தெரியாமலேயே குழந்தைகளுக்கு ஜேம்ஸ் என் று பெயரிட்டனர். இருவரும் சட்ட அமலாக்கப் பிரிவில் வேலைக்கு அமர்த்தப்பட்ட னர். இருவருக்குமே பல திறமைகள் ஒன்றாகவே இருந்தன. இருவ ரும் லிண்டா என்ற பெயருடைய பெண்களையே முதல் திருமணம் செய்து கொண்டனர். இருவருமே தங்கள் மகன் களுக்கு ஜேம்ஸ் ஆ லன் என்ற பெயரையே இட்டனர். இங்கே சின்ன வித்தியாசம் சொ ல்ல வேண்டும் என்றால் ஒருவர் James Alan என்றும் இன்னொரு வர் James Allan என்று ஒரு l எழுத்து சேர்த்தும் பெயர் வைத்த னர். இருவரும் முதல் மனைவி யை விவாகரத்து செய்து இரண் டாம் திருமணம் செய்து கொண்ட து பெட்டி (Betty) என்ற பெயரு டைய பெண்களை. இருவரும் தங்கள் நாயிற்கு Toy என்ற பெயரையே வைத்திருந்தனர். நாற்பதா ண்டு காலம் கழிந்து இணந்த அந்த இரட்டையர் தங்களை அறியாம ல் தங்கள் வாழ்க்கை களில் இருந்த ஒற்றுமையை எண்ணி அதி சயித்தனர்.
மேஜர் சம்மர்ஃ போர்டு என்ற இங்கிலாந்தைச் சேர்ந்த ராணுவ அதி காரிக்கும் மின்னலுக்கும் இருந்த தொடர்பு ஆச்சரியமா னது. அவர் முதல் உலகப் போர் சமயத்தில் குதிரையில் இருந்து போர் புரிந்து கொண்டிருந்த போ து மின்னல் தாக்கி இடுப்பிற்கு கீழ் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டா ர். பின் அவர் ஓரளவு குணமாகி கனடா நாட்டில் குடி பெயர்ந்தார். அங்கு ஆறாண்டு காலம் கழித்து மீன் பிடித்துக் கொண்டு இருந்த போது மறுபடியும் மின்னலால் தாக்கப் பட்டார். வலது பக்கம் பக்கவாதம் அவரைப் பாதித்தது. மறுபடி குணமடை ந்த அவர் உள்ளூர் பூங்காவில் உலாவிக் கொண்டிருந்த போது மின் னலால் தாக்கப்பட்டு உடம்பு முழுவதும் செயல் இழந் தார். அது நட ந்து இரண்டாண்டுகளில் மரணம் அடைந்தார். இறந்த பின்னும் அவரை மின்னல் விடுவதாக இல்லை. நான்காண்டுகள் கழிந்து அவருடைய கல்லறை மின்னலால் தாக்கப்பட்டு சிதிலமா கியது.
இந்த நிகழ்ச்சிகள் நம்மை ஆச்சரியப்பட வைக்கின் றன அல்லவா? இவற்றை எல்லாம் தற்செயல் என்று கண்டிப்பாக நாம் நினை த்து விட முடியாது. இந்த சம்பவங்களைப் படிக்கை யில் அவற்றில் முன்பே தீர்மானிக்கப்பட்ட அல்லது விதிக்கப்பட்ட ஒரு அம்சம் இருக்கிறது என்றல்லவா தோன்றுகிறது. ஏன், எதற்கு என்பது விள ங்கா விட்டாலும் கூட அந்த ஏதோ ஒரு ‘விதி’யை நம்மால் மறுக்க முடிவதில்லை அல்லவா?
தற்செயலாக நடப்பது போல் இருக்கும் சில சம்பவங்களைப் பின் யோசித்துப் பார்த்தால் அது தற் செயல் தானா என்கிற சந்தேக ம் நமக்கு வந்து விடும். அறி வியல் அல்லது பகுத்தறிவு விதிகளுக்குப் பொருந்தாத வையாக அவை தோன்றினாலு ம் கூட நம் அறிவு க்கெட்டாத ஏதோ ஒரு ’விதி’ அந்த நிகழ்வு களை சீரான முறையில் இயக் கி இருப்பது போல தோன்றும். அப்படிப்பட்ட சில ஆதார பூர்வ மான நிகழ்வுகளை இங்கு பார்ப்போமா?
முதலில் இரண்டு அமெரிக்க ஜனாதிபதிகள் விஷயத்தில் இருந்த மாபெரும் ஒற்றுமைகளைப் பார்ப்போம்-
1. ஆப்ரகாம் லிங்கன் 1860 ஆம் ஆண் டும், ஜான் கென்னடி 1960 ஆம் ஆண்டும் அமெரிக்க ஜானாதிபதியானார்கள். சரி யாக நூறு வருட இடைவெளி.
2. இருவரும் வெள்ளிக்கிழமை அன்று, தத்தம் மனைவிகளின் அருகில் இருக் கும் போது சுட்டுக்கொல்லப்பட்டார்கள்.
3. இருவர் மனைவிகளும் வெள்ளை மாளிகையில் வாழும் போது பிள்ளை பெற்றனர். பிறந்தவுடன் குழந்தை இற ந்தும் போனது.
4. இருவரும் தலையின் பின்பகுதியில் குண்டு துளைத்துச் செத் தார்கள்.
5. இருவரும் இறந்த பின் ஜான்சன் என்ற பெயருள்ளவர்கள் உட னே ஜனாதிபதியாகப் பதவி ஏற்றார்கள். (ஆண்ட்ரூ ஜான்சன், லிண் டன் ஜான்சன்)
6. ஆண்ட்ரூ ஜான்சன் பிறந்தது 1808. லிண்டன் ஜான்சன் பிறந்தது 1908. சரியாக அதே நூறு வருட இடை வெளி.
7. இருவரையும் கொன்றவர்கள் பிற ந்த வருடங்கள் கூட நூறு வருட இடைவெளிகள். ஜான் வில்க்ஸ் பூத் பிறந்தது 1839. லீ ஹார்வி ஆஸ்வா ல்டு 1939.
8. இரு கொலைகாரர்களும் பிடிபட்டு வழக்குத் தொடுப்பதற்கு முன் சுட் டுக் கொல்லப்பட்டார்கள்.
9. பூத் லிங்கனை ஒரு தியேட்டரில் கொன்று விட்டு ஒரு கிடங்குக்கு ஓடினான். ஆஸ்வால்டு ஒரு கிடங்கிலிருந்து கொன்று விட்டு தியே ட்டர் நோக்கி ஓடினான்.
10. லிங்கனின் செயலாளரின் முன் பெயர் ஜான். ஜான் கென்ன டியின் செயலாளரின் பின் பெ யர் லிங்கன்.

கருத்துகள்