இனி இயற்கை பேரிடர்கள் காலத்தில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பேஸ்புக் மூலம் நான் நலமாக இருக்கிறேன் என தெரிவிக்கலாம் : பேஸ்புக்கின் புதிய வசதி !!
பேஸ்புக் ஒரு புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளது . இந்த வசதி மூலம் சுனாமி , நிலநடுக்கம் , வெள்ளம் போன்றவை ஏற்படும் போது நமது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு நாம் நலமாக இருப்பதை அறிவித்துக் கொள்ளலாம் . இதனை " சேப்டி செக் டுல் " ("Safety Check Tool ") என்று பெயரிட்டுள்ளனர் . ஜப்பானில் சுனாமி ஏற்பட்ட போது பேஸ்புக் பொறியாளர்கள் இது போன்று ஒன்றை உருவாக்கினர் . அந்த வசதியன் மேம்படுத்தப்பட்ட ஒன்றாக தான் இது இருக்கிறது .
இந்த வசதியை நாம் ஆக்டிவேட் செய்து விட்டால் , பேஸ்புக் நாம் இருக்கும் இடத்தை நமது ப்ரொபைல் மூலம் அறிந்து கொண்டு , நமது இடத்தில் ஏதாவது இயற்கை சீற்றம் ஏற்பட்டால் , நம்மிடம் " நீங்கள் நலமாக இருக்கீறீர்களா ? என கேட்கும் . இதற்கு நாம் ஆம் என்று பதில் அனுப்பினால் நமது பேஸ்புக் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு நாம் நலமாக இருக்கும் செய்தி சென்றுவிடும் . இதற்கு இல்லை என்று பதில் அனுப்ப முடியாது
கருத்துகள்
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்.