“ நமது தோட்டத்தில் விளையும் பயிரிகளில்
முதல் அறுவடையை உள்ளூர் இறைவனுக்கு
அளிப்பது வழக்கம். அதன்படி வாழைத் தோட்ட உரிமையாளர் தன் தோட்டத்தில்
விளைந்த முதல் வாழைத்தாரை சற்று தொலைவில்
இருந்த முருகன் கோயிலுக்கு வேலையாள் மூலம்
அனுப்பியுள்ளனர். தூக்கிச் செல்லும் வழியில் அவருக்கு பசிக்க அதிலிருந்து நான்கு பழங்களை
தின்றுவிட்டார்.
பின்னர் கோயில்
அர்ச்சகரை பண்ணையார் சந்தித்தபோது விவரம் தெரிய உடனே வேலையாள் தண்டிக்கப்பட்டார். அன்று இரவு பண்ணையார் கனவில்
வந்த முருகன் “ நீ அனுப்பிய நான்கு வாழைப்பழங்களும்
நன்றாக இருந்தன “ என்று கூறியதை கேட்ட பண்ணையார் திடுக்கிட்டு எழுந்து வேலையாளிடம் மன்னிப்புக்
கேட்டாராம். ஏழையின் பசிக்கு உதவும் உணவே இறைவனுக்கு
அளிக்கும் உணவாகும் என்பதே இதன் பொருளாகும்.
குன்றக்குடி
அடிகளார் சொற்பொழிவிலிருந்து …………………
கருத்துகள்
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்.