படங்களை நம் கற்பனைத்திறனுக்கேற்ற வகையில் அமைக்க, இமேஜ்களைக் கையாளும் பல அப்ளிகேஷன் புரோகிராம்கள் உள்ளன. இருப்பினும் இவற்றை விலை கொடுத்து வாங்கிப் பயன்படுத்துவது என்பது அனைவராலும் முடியாத ஒரு விஷயமாகும்.
தொழில் ரீதியாகவும், பயன்படுத்திப் பார்க்கும் ஆசையிலும் இலவச இமேஜ் டூல்ஸ்களை பலர் எதிர்பார்க்கின்றனர். இணையத்தில் இந்த நோக்கத்தில் தேடுகையில், ஒரு சில குறிப்பிட்ட வகையில் இமேஜ்களை எடிட் செய்திடும் வகையில் பல புரோகிராம்கள் இலவசமாகக் கிடைப்பது தெரிய வந்தது. அவை குறித்த பட்டியல் இங்கு தரப்படுகிறது. இவற்றை இயக்கிப் பார்த்துப் பயன் பெறுவது உங்களின் திறமையைப் பொறுத்தது.
1. வாட்டர் மார்க் இமேஜ் (Water Mark Images): உங்கள் படங்களுக்கு வாட்டர் மார்க் அமைத்திட வேண்டுமா? மொத்தமாக 20 படங்கள் வரை இணைத்து அமைத்திட ஒரு புரோகிராம் உதவுகிறது. படங்களைத் தயார் செய்து, வரிசைப்படுத்தி, அவற்றுக்கான வாட்டர்மார்க்கில் இடம் பெற வேண்டிய எழுத்துக்களை ஒழுங்கு செய்து, அதன் இடத்தை வரையறை செய்து, அவற்றிற்கு விருப்பப்பட்டால், ஷேடோ எபக்ட் கொடுத்து அமைக்கலாம். இதன் பெயர் WatermarkImages. இதனை http://watermarkimages.com/என்றமுகவரியில் பெறலாம்.
2. பிக்ஸ் ரெட் ஐஸ் (Fix Red Eyes): டிஜிட்டல் போட்டோக்களை எடுக்கையில் நம் கண்களில் சிகப்பு புள்ளிகள் அமைவது தவிர்க்க முடியாததாக, சில டிஜிகேம்களில், அமைந்துவிடும். பல கேமராக்களில் இவற்றை நீக்குவதற்கான செட்டிங்ஸ் கொடுத்திருந்தாலும், சில வேளைகளில் கண்களில் சிகப்பு கோளங்கள் அமைந்துவிடுகின்றன. இந்த சிகப்பு வளையங்கள் அல்லது கோளங்களை நீக்கினால் தான் படங்கள் பார்க்கும் வகையில் அமையும். இதற்கான வசதியினை http://www.fixredeyes .com// என்ற முகவரியில் உள்ள தளத்தில் பெறலாம். இந்த தளத்திற்கு, இவ்வாறு சிகப்பு கோளங்கள் நீக்க வேண்டிய இமேஜ்களை அப்லோட் செய்திட வேண்டும். பின் அவற்றை சிகப்பு கோளங்களை அடையாளம் காட்டி, பிக்ஸ் (Fix) செய்திட கட்டளை கொடுத்தால், அவை நீக்கப்பட்டு போட்டோக்கள், நல்ல முகங்களுடன், சிறப்பாகக் கிடைக்கின்றன.
3. இமேஜ் ஸ்பிளிட்டர் (Image Splitter): படங்களைப் பிரித்து பல நெட்டு மற்றும் குறுக்கு வரிசைகளில் அமைக்க விரும்புகிறீர்களா? கவலையே பட வேண்டாம். உங்கள் படத்தை http://www.htmlkit.com/ services/is/ என்னும் தளத்திற்கு அப்லோட் செய்திடுங்கள். பின் எத்தனை நெட்டு மற்றும் படுக்கை வரிசை என்று தேர்ந்தெடுங்கள். எந்த இமேஜ் பார்மட்டில் படம் தேவை என்பதனையும், அதன் ரெசல்யூசன் எவ்வளவு இருக்க வேண்டும் என்பதனையும் கொடுத்திட்டால், படம் நீங்கள் விரும்பிய வகையில் கிடைக்கும்.
4. இமேஜ் மெர்ஜர் (Image Merger): இரண்டு படங்களில் ஒன்றைப் பின்னணியிலும், மற்றொன்றை முன்பகுதிப் படமாகவும் அமைக்க விரும்புகிறீர்களா! இதற்கென ஒரு ஆன்லைன் டூல் கிடைக்கிறது.http://www.imagemerger.net/என்ற முகவரி உள்ள தளத்திற்கு இரண்டு படங்களையும் அப்லோட் செய்திடுங்கள். முதல் படம் பின்னணியிலும், அடுத்த படம் முன் இடத்திலும் இருக்கும்படி அமைக்கப்படும்.
5. மிரர் எபக்ட் (Mirror Effect): எந்தப் படத்திற்கும், அதன் வலது இடது பக்கங்களிலோ அல்லது மேல் கீழாகவோ, அச்சாக ஒரு கண்ணாடி பிம்பம் தோன்றும் வகையில் படத்தை மெருகூட்டி அமைக்கலாம்http://www.mirroreffect.net/ என்ற தளத்திற்கு படத்தை அப்லோட் செய்திடுங்கள். அடுத்து பிரதிபலிக்க வேண்டியதற்கான அளவைக் கொடுக்க வேண்டும். கீழ், மேல், இடது மற்றும் வலது என எந்த வகையில் பிரதிபலிக்க வேண்டும் என்பதனையும் அமைத்திட்டால், அழகான பிம்பத்துடன் கூடிய படமாக உங்கள் இமேஜ் அமைக்கப்பட்டுத் தரப்படும்.
6. டெஸ்ட் இமேஜ் (Text Image): போட்டோ ஒன்றை டெக்ஸ்ட் இமேஜ் ஆக மாற்றுவதற்கு ஒரு தளம் உதவுகிறது. இதன் முகவரிhttp://www.textimage.com/index.html HTML, ASCII or Matrix என்ற வகைகளில் எந்த வகையில் உங்களுக்கு வேண்டும் என தேர்ந்தெடுத்து தந்தால், இந்த தளம் அவ்வாறே அமைத்துத் தருகிறது.
7. ஸ்பீச் பப்பிள்ஸ் (Speech bubbles): சித்திரக் கதை பார்த்திருப்பீர்கள். குழந்தைகளாய் இருக்கும்போது இவற்றைப் படித்து ரசிக்காமல் இருந்திருக்க மாட்டோம். வளர்ந்த பின்னர் இந்த படங்களுக்குப் பதிலாக நம் போட்டோக்களை வைத்து ஏன் அமைக்கக்கூடாது என்ற ஆர்வம் வந்திருக்கும். நம் குழந்தைகளின் படங்களையே வைத்து அமைக்கலாமே என்று ஆசைப்பட்டிருக்கலாம். அப்படியானால் படங்களுக் கான வசனங்களை தயார் செய்து அவற்றை படங்களுக்கு மேலாகக் குமிழ்களை உருவாக்கி அமைக்க வேண்டுமே! உங்களின் இந்த ஆசைகளுக்காகவே ஒரு தளம் உள்ளது. http://speechable.com/ என்ற முகவரியில் உள்ள தளம் இந்த வசதியை அமைக்க உங்களுக்கு உதவுகிறது. அமைய இருக்கின்ற டெக்ஸ்ட் மற்றும் பப்பிள் சைஸ் ஆகியவற்றை வரையறை செய்து அமைத்தால் போதும். படம் மாற்றப்பட்டு கிடைக்கும்.
8. வாட்டர் எபக்ட் (Water Effect): சில அழகான நீர்நிலைக் காட்சிகளைப் பார்த்திருப்பீர்கள். அருகே இருக்கும் மரங்கள், பறவைகள், வானத்தில் உள்ள நிலா ஆகிய எல்லாம் அப்படியே பிம்பங்களாக நீர் அலைகளில் உருவத்தை ஒட்டி தலைகீழாகக் காட்டப்பட்டு அழகாக இருக்கும். நம் உருவங்களை இப்படிப் பார்க்க வேண்டுமே என்ற ஆவல் உள்ளதா? இதற்காக நாம் நீர்நிலைகளைத் தேடி, ஒளி சரியாகப்பட்டு, பிம்பங்கள் அசையாத நிலைக்குக் காத்திருந்து பின் போட்டோ எடுப்பது என்பது நிச்சயம் அனைவருக்கும் கை கூடாது. ஏற்கனவே எடுத்த போட்டோக்களுக்கு இந்த எபக்ட் தருவதற்கென ஒரு தளம் உள்ளது. அதன் முகவரி http://www.watereffect.net/. இந்த இணைய தளம் சென்று, எந்த படத்திற்கு இந்த தலைகீழ் தண்ணீர் உருவம் வேண்டும் என எண்ணுகிறீர்களோ, அதனை அப்லோட் செய்திடவும். ஓரிரு நிமிடங்களில் நீர் அருகே படத்தில் உள்ளவர்கள் இருந்தால் எப்படி காட்சி இருக்குமோ, அந்த வகையில் போட்டோ கிடைக்கும். அந்த தளத்தில் போட்டோ இருக்கும் வரை, நீர் அசைவது போலவும், அதில் தெரியும் உருவப் பிம்பங்களும் அப்படியே அலை அலையாய் இருப்பது போலவும் காட்சி இருக்கும். அதை காப்பி செய்து நம் கம்ப்யூட்டரில் சேவ் செய்திட்டால் இந்த அனிமேஷன் இல்லாமல், பிம்பங்களுடன் போட்டோ இருக்கும்.
9. வளைவுகள் அமைக்க (Round Pic): உங்கள் படங்களின் மூலைகளில் அழகான வளைவுகள் அமைக்க வேண்டுமா? நீங்கள் எந்தப் படத்தை அப்லோட் செய்தாலும், அதன் ஓரங்களை வளைவுகளுடன் அமைத்துத் தருகிறது இந்த தளம்.வளைவுகள் எந்த அளவில் இருக்க வேண்டும் என்பதை செட் செய்து, படத்தை அப்லோட் செய்திட்டால், படத்தின் காட்சி பிரிவியூவாகக் கிடைக்கும். உங்களுக்குப் பிடித்திருந்தால் ஓகே கொடுத்து படத்தைப் பெறலாம். இந்த தளத்தின் முகவரி: http://www.roundpic.com/
10. வேடிக்கையான படம் (Be Funky): உங்கள் படங்களுக்கு டிஜிட்டல் பெயிண்ட் அடிக்க வேண்டுமா! அல்லது அவற்றைக் கார்ட்டூன் படங்களைப் போல அமைக்க வேண்டுமா! http://www.befunky.com/ என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும். படத்தைத் திறந்து, எந்த மூலையையும் இழுக்கவும். பலவகை பின்னணி மற்றும் துணை சாதன வசதிகளைப் பயன்படுத்தி கார்ட்டூன் வகையில் படத்தை மாற்றவும். உங்கள் படங்களை மை, பென்சில் போன்றவற்றில் வரைந்தது போலவும் மாற்றலாம். இந்த தளத்தில் வீடியோக்களுக்கும் கார்ட்டூன் எபக்ட் தர முடியும்.
கருத்துகள்
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்.