நீரிழிவு நோயாளர்கள் தமது கால்களைப் ஏன் பாதுகாக்க வேண்டும்?

நீரிழிவு நோயாளிகளுக்கு கால்புண் ஏற்படுவதற்கான மருத்துவக்காரணிகள். கால்நரம்புகளின் செயற்பாடு குறைவடைந்து தொடுகை மற்றும் நோவு போன்ற உணர்ச்சிகளற்றுக் காலில் விறைப்புத்தன்மை ஏற்படல்.

கால்களுக்கான இரத்த ஓட்டம் நலிவடைதல் நீரிழிவு கட்டுப்பாடு குறைவடைதலும் இரத்தத்தில் சீனியின் அளவு அதிகரித்தலும் கிருமித்தொற்றுக்கள் ஏற்படல் நீரிழிவு கால் புண்களை ஏற்படுத்தக்கூடிய காரணிகள்.
பாதம் மற்றும் உள்ளங்கால் பகுதிகளில் ஏற்படும் தோல்தடிப்புத்தன்மை, தொப்புளங்கள் மற்றும் கண்டல் காயங்கள். கால்விரல்களிடையில் ஏற்படும் கிருமித்தாக்கம். கால்விரல்கள் நகக்கணுக்களில் ஏற்படும் கிருமித்தாக்கம்.
பாதம் மற்றும் கீழ்க்கால்களில் ஏற்படும் வெட்டுக்காயங்களும் கீறல் காயங்களும். பிராணிகள், பூச்சிகளால் காலில் ஏற்படும் கடி மற்றும் குத்துக்காயங்கள். நீரிழிவு கால்புண் அறிகுறிகள் மேற்குறிப்பிட்ட காரணிகளால் பாதிக்கப்பட்ட காலின் பகுதியில் கிருமித்ததாக்கமேற்படுவதால் பாதம் சிவந்து வீக்கமடைந்து உஷ்ணமாக இருத்தல். குறிப்பிட்ட காலின் பகுதி கறுப்பு நிறமாகி சீழ்பிடித்தல். பாதம் மற்றும் கால்களில் துர்நாற்றம் வீசுவதுடன் புண்கள் உருவாதல். பாதத்தின் என்புகள் கிருமித்தொற்றுக்குள்ளாதலும் விரல் மற்றும் பாதம் அழுகிப்போதலும். நீரிழிவு கால்புண் உங்களை அங்கவீனர்களாக்கலாம். பாதிக்கப்பட்ட கால்விரல் வெட்டி அகற்றப்பட வேண்டி வரலாம். முன்பாதங்கள் வெட்டியகற்றப்பட வேண்டி வரலாம். முழங்காலுக்கு கீழாககக் கால் வெட்டியகற்றப்படலாம். முழங்காலுக்கு மேலாகக் கால் வெட்டியகற்றப்படலாம்.
நீரிழிவு கால் புண் காரணமாக ஏற்படும் அங்கவீனத்தை தடுக்கும் முறைகள். கால்மற்றும் பாதங்களைத் தினமும் கழுவிச் சுத்தமாக வைத்திருத்தல். தினமும் கால்விரல்களுக்கிடையில் ஈரலிப்பின்றி பேணுதல். தினமும் கால்விரல்கள், விரல் ஈறுகள் பாதம் மற்றும் கால்களின் கால்புண் ஏற்படக்கூடிய காரணிகள் பற்றி அவதானித்தல். இதற்குக் குடும்ப உறுப்பினர்கள் உதவுதல் அவசியம். தொழில் செய்யும் இடங்களிலும் வீதியில் நடக்கும்போதும் பாதணிகள் அணிதல். இறுக்கமான மற்றும்மிகவும் தொய்ந்து பழுதான காலணிகளைத் தவிர்த்தல். கால்விரல் நகங்கள் மட்டமாக வெட்டுதல். பாதத்தில் ஏற்படும் தோல் தடிப்புக்கள் மருத்துவரால் சிகிச்சை அளிக்கபட்டு நீக்கப்பட வேண்டும். இவற்றை நோயாளி வெட்டியகற்ற முற்படக்கூடாது. பாதம் மற்றும் காலில் ஏற்படும் காயங்களுக்கு (சிறிய காயங்கள் உட்பட) உடனடி மருத்துவ ஆலோசனை பெறுதல். தாமதப்படுத்தலும் நாட்டு வைத்தியம் செய்தலும் கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டும்.
நீரிழிவுக்குப் பாவிக்கும் மருந்துகளைத் தவறாது உபயோகித்து இரத்த்தில் சீனியின் அளவைப் பேணுல் புகைப்பிடித்தலை தவிர்த்தல்வேண்டும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்,

கருத்துகள்