சித்தர்கள்

1. வணங்கத்தகுந்தவர்கள் – தாயும், தந்தையும்
2. வந்தால் போகாதது – புகழ், பழி
3. போனால் வராதது – மானம்,உயிர்
4. தானாக வருவது – இளமை, முதுமை
5. நம்முடன் வருவது – புண்ணியம், பாவம்,
6. அடக்க முடியாதது – ஆசை, துக்கம்
7. தவிர்க்க முடியாதது – பசி, தாகம்
8. நம்மால் பிரிக்க முடியாதது – பந்தம், பாசம்
9. அழிவை தருவது – பொறாமை, கோபம்
10. எல்லோருக்கும் சமமானது – பிறப்பு, இறப்பு
11. கடைத்தேற வழி – உண்மையும்,உழைப்பும்
12. ஒருவன் கெடுவது – பொய் சாட்சி, செய் நன்றி மறப்பது
13. வருவதும் போவதும் – இன்பம், துன்பம்
14. மிக மிக ந்ல்ல நாள் – இன்று
15. மிகப் பெரிய வெகுமதி – மன்னிப்பு
16. மிகவும் வேண்டாதது – வெறுப்பு
17. மிகப் பெரிய தேவை – சமயோசித புத்தி
18. மிகக் கொடிய நோய் – பேராசை
19. மிகவும் சுலபமானது – குற்றம் காணல்
20. கீழ்தரமான விஷயம் – பொறாமை
21. நம்பக்கூடாதது – வதந்தி
22. ஆபத்தை விளைவிப்பது – அதிக பேச்சு
23. செய்யக்கூடாதது – தவறுகள்
24. செய்ய வேண்டியது – உதவி
25. விலக்க வேண்டியது – விவாதம்
26. உயர்வுக்கு வழி – உழைப்பு
27. நழுவ விடக்கூடாதது – வாய்ப்பு


கருத்துகள்