தயிர் அல்லது மோர்
வயிற்று எரிச்சலை தணிப்பதில் தயிர் அல்லது மோரை விட சிறந்த பொருள் எதுவும் இல்லை. எனவே தினமும் தயிர் அல்லது மோரை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள்.
வாழைப்பழம்
வாழைப்பழம் சாப்பிட்டால், வயிற்று எரிச்சல், நெஞ்செரிச்சல் போன்ற அனைத்து பிரச்சனைகளும் சரியாகும்.
இளநீர்
இளநீர் தான் வயிற்று எரிச்சலை தணிக்க கூடிய மிகசிறந்த பொருளாகும். அதிலும் இதனை தினமும் காலையில் வெறும் வயிற்றில் ழுடித்து வர, உடனே வயிற்று பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்.
பால்
கால்சியம் அதிகம் நிறைந்த பாலை அதிகம் குடித்து வந்தால், அது வயிற்றில் சுரக்கப்படும் அதிகப்படியான அமிலத்தைத் தடுக்கும். அதிலும் உணவு உண்ட பின்னர் ஒரு டம்ளர் பால் குடிப்பது மிகவும் நல்லது.
தர்பூசணி பழம்
தர்பூசணியை வயிற்று எரிச்சலின் போது ஜூஸ் போட்டு குடித்தால், வயிற்று எரிச்சலானது உடனே தணியும்.
வெள்ளை சாதம்
வயிற்றில் ஏற்படும் எரிச்சலை தணிப்பதற்கு வெள்ளை சாதத்தை சாப்பிட்டு வாருங்கள். இதனால் அவை எளிதில் செரிமானமடைவதோடு, சாதத்தை செரிப்பதற்கு இன்னும் அதிகப்படியான அமிலத்தை சுரக்க தேவையில்லை.
இஞ்சி
இஞ்சி டீ போட்டு குடித்து வந்தால், வயிற்றில் உள்ள புண் குணமாவதோடு, எரிச்சலும் குறையும்.
புதினா
அதிகப்படியான அமில சுரப்பினால் எரிச்சல் ஏற்படுவதாக இருந்தால், புதினாவை டீ போட்டு அல்லது அப்படியே தினமும் சாப்பிட்டு வர விரைவில் குணமாகும்.
வென்னிலா ஐஸ்க்ரீம்
இந்த நிவாரணியைப் பார்த்ததும், அனைவருக்கும் ஒரே குஷியாக இருக்கும். ஆம், உண்மையிலேயே வென்னிலா ஐஸ்க்ரீம் சாப்பிட்டு வந்தால், அது அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுவிக்கும்.
கருத்துகள்
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்.