ஷங்கரின் ஐ



சென்னை: வரலாறு காணாத டெக்னிக்கல் மிரட்டலாக ஐ படம் அமைந்துள்ளது. விக்ரம் நடிப்பில் பின்னி விட்டார்.
இந்த ரோலில் நடிக்க இன்னொருவர் பிறந்துதான் வர வேண்டும். மிரட்டி விட்டார் என்று ஐ படம் பார்த்த ரசிகர்கள் மிகவும் உற்சாகத்துடன் கூறி வருகிறார்கள்.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் ஐ. பி.சி.ஸ்ரீராம் மீண்டும் கேமரா பிடித்த படம், விக்ரமின் மிரட்டல் நடிப்பு, ஷங்கரின் இயக்கம் இன்னும் இன்னும் பல டெக்னிக்கல் சமாச்சாரங்கள்.. அர்னால்டே வந்து ஆடியோவை வெளியிட்டது என்று இப்படம் குறித்து ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் படம் குறித்து ரசிகர்களிடையே ஹார்ட் பீட்டை தாறுமாறாக்கி விட்டிருந்தன.

இது போதாதென்று ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்களும் ரசிகர்களை ஏற்கனவே மெர்சலாக்கியிருந்தது. இந்த பரபரப்புகளுக்கு மத்தியில் இன்று ஐ படம் தியேட்டர்களைத் தொட்டது.. அதே வேகத்தில் ரசிகர்களின் மனதையும் எட்டிப் பிடித்து விட்டது.

இன்று அதிகாலை 4 மணிக்கு முதல் ஷோ.. அடுத்து 8 மணிக்கு ஷோ என்று படம் படு பிசியாக ஓடிக் கொண்டிருக்கிறது.

படம் பார்த்து விட்டு வந்த ரசிகர்களைப் பிடித்து நமது செய்தியாளர் ஐ படம் எப்படி என்று கேட்டபோது அவர்கள் சொன்னது..

படம் மொத்தம் 3 மணி நேரம் 10 நிமிடம் ஓடுகிறது. படம் செம நீளம்தான். ஆனால் நேரம் போனதே தெரியவில்லை. போரடிக்கவில்லை. மாறாக மிரண்டு போய் வெளியே வந்துள்ளோம்.

ஷங்கர் டெக்னிக்கலாக கொடுத்துள்ள படங்களில் இதுதான் பெஸ்ட். சும்மா மிரட்டி விட்டார் பாஸ். பிரமாதம்.
விக்ரம் பற்றி சொல்லவே வேண்டாம். மிரள வைத்து விட்டார். என்ன நடிப்பு இது.. அபாரம். இப்படி நடிக்க இன்னொருவர் பிறந்துதான் வர வேண்டும். விக்ரம் வாழ்க்கையில் மிகப் பெரிய படம் இது.

படத்தின் லொக்கேஷன் பிரமிக்க வைக்கிறது. பெரும்பாலும் சீனாவில்தான் எடுத்துள்ளனர். இப்படி ஒரு லொக்கேஷனை தமிழ் சினிமாவில் பார்த்ததே இல்லை. அதிலும் ஷங்கர் தனது முத்திரையைப் பதித்து விட்டார். அசாதாரணமான இடங்கள் அத்தனையும்.

படத்தின் மிகப் பெரிய பிளஸ் பாயண்ட் இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான்தான் பாடல்களில் பிரமிக்க வைத்து விட்டார். பின்னணியிலும் பிரமிக்க வைத்திருக்கிறார். பாட்டின் வரிகளுக்கு இடை இடையே வரும் இசையில் புதுப் புயலாக மாறி அசத்தியிருக்கிறார். ரஹ்மானின் பெஸ்ட் மியூசிக் இது.

பி.சி.ஸ்ரீராம் கேமராவில் புகுந்து விளையாடியிருக்கிறார். காட்சிகளை அவர் பிடித்துள்ள விதம் அபாரம்.
சண்டைக் காட்சிகளில் புதுமை என்று சொல்ல முடியவில்லை. டிப்பிக்கல் ஷங்கர் டைப் சண்டைகளாக உள்ளன.
படம் பெஸ்ட்டாக, சிறப்பாக இருக்கிறது.. போரடிக்காமல் விறுவிறுப்பாக இருக்கிறது.

கருத்துகள்