உங்கள் சிம் அல்லது போன் ஹாக் செய்யப்பட்டுள்ளதா என்று அறிய வேண்டுமா?

தற்போது சிம் கார்டில் உள்ள என்கிரிப்ஷன் டெக்னாலஜியில் உள்ள குறைபாடுகளின் மூலம் சைபர் கிரிமினில்களால் எளிதாக சிம்கார்டை வைத்து போன்களை ஹாக் செய்ய முடியுமாம். உங்கள் போனை அவர்களின் கட்டுபாட்டில் கொண்டு செல்லவும் முடியுமாம் .

சிம்கார்டின் என்கிரிப்ஷன் குறைபாடுகளின் சிம்கார்டில் உள்ள 56 டிஜிட் சீக்குவன்ஸ் நம்பரை ஹாக் செய்து அதன் மூலம் போனை தங்கள் கட்டுபாட்டிற்குள் கொண்டுவர முடியும் என்றும்.டெக்ஸ்ட் மெசேஜ் மூலம் போனுக்கு வைரஸ் அனுப்பலாம் என்றும் மேலும் நீங்கள் உங்கள் போனில் மொபைல் பேமென்ட் சிஸ்டம் வைத்திருந்தால் அதையும் ஹாக்கர்களால் பயன்படுத்த முடியும் என்றும் சொல்கிறார்கள்.


அது மட்டுமின்றி உங்கள் போனில் ஹாக்கர்கள் சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்து போனின் உதவி இல்லாமலே பயன்படுத்த முடியும். போனை வைத்தே உங்களை கண்கானிக்கலாமாம். அதாவது 56 டிஜிட் சீக்குவன்ஸ் நம்பரை மூலம் உங்கள் போனை இரண்டு நிமிடத்தில் சாதாரண கம்பியூட்டரை வைத்தே ஹாக் செய்துவிடலாம். உங்களது மெசேஜ்களை ஹாக்கர்கள் படிக்கலாம். உங்கள் போனில் உள்ள டேட்டாவை அவர்கள் எடுக்க முடியும் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.



இது குறித்து சென்னை சைபர் கிரைமில் பணிபுரியும் நம் நண்பர் ஒருவரிடம் கேட்டபோது,” இதெல்லாம் புது தகவலே இல்லை.போன ஐபிஎல் சூதாட்டத்தில் சிக்கினாரே ஸ்ரீசாந்த்.அவரின் செல் போனை இப்ப நீங்க கேள்விப் பட்ட டெக்னாலஜிபடி ஒட்டுக் கேட்டு கண்காணித்ததுதான் அவர் கையும் களவுமாக பிடிபட காரணமாக இருந்தது.



அது சரி..உங்களுடைய தொலைபேசியும் ஏதாவது சந்தர்ப்பத்தில் ஒட்டுக்கேட்கப்படுகின்றதா? அல்லது வைரஸ் அல்லது வேறு வகையில் ஹேக் செய்யப்பட்டுள்ளதா? என்பதை அறிவது எப்படி?-ன்னு கேட்டா நீங்கள் பயன்படுத்துவது ஸ்மார்ட் போன்கள் என்றால் திடீரென அதனது வேகம் குறைவதுபோன்று உங்களுக்கு தோன்றினால் அது வைரஸ் தாக்குதலுக்கான அறிகுறியாக இருக்கலாம். இதில் IOS டிவைஸ்கள் எனில் கவலைப்பட தேவையில்லை.



மேலும் நண்பருக்கு அனுப்பும் மெயில்கள் இருமுறை அனுப்பப்பட்டது போன்று தொலைபேசியில் தெரிகின்றதா? அல்லது ஒரு முறையே பதிவு செய்யப்பட்ட நண்பரின் தொடர்பு எண் இரு முறை பதிவாகியுள்ளதா? அப்படியாயின் நீங்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.



அத்துடன் ஸ்மாட் தொலைபேசிகளில் இணையத்தை பயன்படுத்துபவர்களுக்கு திடீரென போன மாதத்தின் கட்டண எண்ணிக்கை அதிகரித்துள்ளதெனில் உங்கள் தொலைபேசி ஹேக் செய்யப்பட்டதற்கான அறிகுறியில் இதுவும் ஒன்று. கூடவே உங்க போன் பேட்டரி சார்ஜ் சீக்கிரம் தீர்ந்து போகிறது? அப்படியானால் உங்களுக்குத் தெரியாமல் உங்கள் போனில் ஏதாவது அப்பிளிகேசன் இயங்கிக் கொண்டிருக்கலாம்.

கருத்துகள்