தெற்கு ஆபிரிக்காவில் உள்ள ஜாம்பியா நாட்டில் உள்ள தென் லுவாங்கா தேசிய பூங்காவில் 14 சிங்கம் இணைந்து நடத்திய தாக்குதலில் சிறிய யானைக் குட்டி உயிர்பிழைத்தது
தொடர்பான வீடியோ சுற்றுலா சென்றவர்களால் எடுக்கப்பட்டுள்ளது.
சஃபாரி சென்றவர்கள் எடுத்த வீடியோ இணையதளங்களில் வெளியாகியுள்ளது. லுவாங்கா ஆற்றின் படுகையில், சிங்கங்களின் தாக்குதலில் இருந்து உயிர்பிழைக்க யானை குட்டி நடத்திய போராட்டம் அதில் பதிவாகியுள்ளது. சிறிய யானை குட்டியின் செயல்பாடும் முயற்சி செய்தால் எதனையும் செய்ய முடியும் என்று உணர்த்தும் அளவுக்கு இருந்தது.
பசியோடு இருக்கும் சிங்கங்கள் யானை குட்டியின் மீது பாய்கிறது. யானை குட்டியை சுற்றி வளைத்து சிங்கங்கள் தாக்குதல் நடத்துகிறது. சிங்கங்கள் யானை குட்டியை கடித்து குதற முயற்சிக்கிறது. முதலில் சிங்கங்களின் கூட்டு தாக்குதலில் இருந்து விடுபட முடியாத யானை சோர்வுடன் பின்தங்கியது.
சிங்கங்கள் யானை குட்டியை மண்டியிட வைக்கும் அளவுக்கு தாக்குதல் நடத்துகிறது. பின்னர் சுதாரித்து எழுந்த யானை குட்டி, சுற்றி வளைத்து நின்ற சிங்களை விரட்டுகிறது. ஆனாலும் சிங்கங்கள் யானையின் மீது ஏறிநின்று கடிக்கிறது.
வலியை பொறுக்க முடியாத யானை குட்டி சிங்கங்களை கால்களால் உதைத்தும், தும்பிக்கையால் அடித்தும் விரட்டுகிறது. ஆனால் யானையின் மீது ஏறிநின்று தாக்கிய சிங்கம் மட்டும் விடவில்லை.
பின்னர் யானையின் பின்னால் சிங்கங்கள் கடிக்கின்றன. யானை குட்டி வேகமாக தண்ணீருக்குள் செல்கிறது. பின்னால் வரும் சிங்களை திரும்பிநின்று அதிரடியாக விரட்டுகிறது. அந்த நேரத்தில் யானை மீது இருந்த சிங்கம் இழே இறங்குகிறது. யானை சிங்கங்களை நெருங்கிவிடாத வண்ணம் விரட்டிவிட்டு பத்திரமாக உயிர்பிழைத்து சென்றது.
கருத்துகள்
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்.