மகரம்


சனி பெயர்ச்சி பலன்கள் 16.12.2014 - 20.11.2017 வரை . உத்திராடம் 2,3,4 பாதம் வரை , திருவோணம் 4 பாதம் முடிய , அவிட்டம் 1,2 , பாதம் மட்டும் , பலன்கள் மதிப்பு 55%


மகர  ராசிக்கு   கடந்த  காலம்  1 வருடம்  நல்ல பலன்களை  கொடுத்திருப்பார்  சனி பகவான் . ஏனென்றால்  கடந்த  காலம்  10ம் இடத்தில் சனி  உச்சம் .அனால்  அவர் இருந்த   நட்சத்திர  சாரம்  சரியில்லை . அதனால்  சனிபகவான்   கடந்த காலம்  1 வருடம்  மட்டுமே நல்ல  பலன்களை   கொடுத்திருப்பார் . ஆனால்  இந்த சனி  பெயர்ச்சி  ராசிக்கு  11ம் இடம்  . நல்ல  இடம் .   கேட்டை , மற்றும்  அனுஷம்  நட்சத்திரத்தில்  சஞ்சரிக்கும்  பொழுது  நல்ல பலன்களை  வாரி வழங்குவார் . ஆனால் மகர ராசி  சர ராசி , சர ராசிக்கு  11ம் இடம்  பாதகமான  இடம் . அதனால்  திடீர்  சரிவையும்  கொடுக்கும் .

சனி  பகவான்  விசாகம்  நட்சத்திரத்தில்  சஞ்சரிக்கும்  காலம்  . விரய காலம் மேலும்  குரு  பெயர்ச்சி  ஆனால் தான்  மகர ராசிக்கு  நல்ல காலம் . ஏனென்றால்  குரு பகவான்  3ம் இடம்  மற்றும் 12ம்  இடத்துக்கு  உரியவர் . குரு பகவானின்  5ம் பார்வை  சனிபகவானின்  மேல் படுகிறது . இதனால்  குடும்பத்தில் , செய்யும்  தொழிலில்  விரயம் உண்டாகும் . குரு  பகவான்  பெயர்ச்சி  ஆன பிறகு  உங்களுக்கு  செய்யும்  தொழிலில் அபரிதமான  பணவரவு  ஏற்படும் . திருமணம்  ஆகாதவர்களுக்கு  திருமணம்  நடக்கும் .



சனி பகவான்  கேட்டை  நட்சத்திரத்தில்  சஞ்சரிக்கும்  பொழுது  தந்தைக்கு  உடல்  நல  கோளாறு  கொடுக்கும் . மேலும்  இந்த ராசிக்கரர்களுக்கு  காலில்  காயம்  ஏற்பட்டு  மருத்துவ  செலவு  ஏற்படும் . ராசிக்கு 2ம்  இடத்து  அதிபதி  சனி பகவான்  , ராசிக்கு  9ம்  இடத்து  அதிபதி  நட்ச்சதிரத்தில் . 11ம்  இடத்தில் சஞ்சரிக்கும்  பொழுது   வெளிநாடு செல்லும்  வாய்ப்பு வரும் .  இந்த காலகட்டத்தில்  பண வரவு  தாரளமாக  வரும் .


சனி பகவான்  தன் சொந்த  நட்சத்திரமான  அனுஷத்தில்  சஞ்சரிக்கும்  பொழுது ,  இரும்பு , கெமிகல்ஸ் , பிளாஸ்டிக்  , தொழில்  செய்பவர்களுக்கு  நல்ல  லாபம் கிடைக்கும் . [ பிறப்பு  ஜாதகத்தில்  2ம் இடத்து  அதிபதி  11ம்  இடத்தில் இருந்து , கோச்சாரத்தில்  அதே  கிரகம்  அந்த இடத்துக்கு  வந்தால்  அபரிதமான  பண  வளர்ச்சி  ஏற்படும்  ]


மகர  ராசிக்கு  11ம்  இடம்  பாதகமான  இடம் . சில  சமயங்களில்  திடீர்  சரிவு ஏற்படும்  என்பதை  நினைவில்  கொள்ளவேண்டும் . 4ம்  இடத்துக்கு 8ம் இடத்தில் சனி பகவான்  சஞ்சரிப்பதால் , வண்டி  வாகனங்களில்  முதலிடு  செய்வதை  தவிர்க்கவும் . மேலும்  வீடு  வாங்கி  விற்பனை  செய்பவர்கள்  நஷ்டம்  அடைய  வாய்ப்பு  உண்டு . தாய்க்கு  உடல்நிலை  பாதிக்கும் .மருத்துவ  செலவு  ஏற்படும் . மனைவி  வேலையில் இருந்தால் , அலுவலகத்தில்  பிரச்சனை  ஏற்படும் .அதனால்  வேலையை  விடும் நிலை  ஏற்படும் .


பரிகாரம்  


சனி பகவானின்  அதிபதி"  காலபைரவரை " சனிக்கிழமை  தோறும்  தீபம்  ஏற்றி வழிபடவும் .

குறிப்பு  



தீபம்  ஏற்றும் பொழுது  சுத்தமான  நல்லெண்ணையை ஏற்றவேண்டும் . இதயம்   ப்ராண்ட்  நல்ல எண்ணெய்  உபயோகிங்கள்

கருத்துகள்