குலோப் ஜாமூன்

gulab jamun







தேவையானவை:

குலோப் ஜாமூன் பவுடர் – 1 பாக்கெட்
சர்க்கரை – 3 கப்
நெய் அல்லது எண்ணெய் – கால் கிலோ
ஏலக்காய் பொடி – 2 சிட்டிகை

செய்யும் முறை:

குலோப் ஜாமூன் பவுடரை ஒரு பாத்திரத்தில் கொட்டி சிறிது சிறிதாக  தண்ணீர் ஊற்றி பிசைந்து வைக்கவும்.

சிறிது நேரம் கழித்து உங்களுக்குத் தேவையான உருண்டை அல்லது நீள உருண்டை வடிவில் தேவையான அளவுகளில் உருண்டை பிடித்து வையுங்கள். உருண்டைகள் பிடிக்கும் போது ஒரு பாத்திரத்தில் எண்ணெய் தேய்த்து அதில் உருண்டையை போட்டு கையினால் உருட்டினால், உருண்டை விரிசல் இல்லாமல் மொழு மொழு என்று வரும்.

வாணலியில் ஒரு பாத்திரத்தில் சர்க்கரையைக் கொட்டி தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். ஏலக்காய் பொடியை சேர்க்கவும்.

மற்றொரு வாணலியில் கால் கிலோ நெய் அல்லது எண்ணெயில் பாதியை ஊற்றி அதில் 2 அல்லது 3 உருண்டைகளைப் போட்டு உருண்டைகள் அனைத்துப் பக்கமும் வேகும் வகையில் உருட்டிக் கொண்டே இருங்கள்.

அடுப்பு மிதமான தீயில் இருக்க வேண்டும். அப்போதுதான் மாவு நன்கு வேகும். தீ அதிகமாக இருந்தால் உருண்டை விரைவாக கருத்துவிடும். மாவும் உள்ளே வேகாமால் இருக்கும்.

உருண்டைகள் நன்கு சிவந்ததும் எடுத்து தனியாக வைக்கவும். இப்படியே அனைத்து உருண்டைகளையும் பொரித்து எடுக்கவும்.

சர்க்கரை பாகு தயாரானதும் அதில் பொரித்த ஜாமுன் உருண்டைகளைப் போட்டு குறைந்தது 5 மணி நேரம் ஊறவிடவும்.

விரைவாக குலோப் ஜாமூன் தயாராக வேண்டும் என்றால், பாகு நன்கு சூடாக இருக்கும் போதே, வாணலியில் குலாப் ஜாமூனை பொரித்து எடுத்து போட்டுவிட்டால், பாகு ஆறியதுமே ஜாமூன் தயாராகிவிடும்.

சுவையான குலோப் ஜாமூன் தயார்.

கருத்துகள்