ஒரு சில ஸ்வீட் வகைகளை மட்டுமே சூடாக அல்லது குளிர்ச்சியாக சாப்பிட நன்றாக இருக்கும். அந்த வகையில் கேரட் அல்வாவை சூடாக அல்லது குளிர்ச்சியாக சாப்பிட இரண்டுமே நன்றாக இருக்கும்.
வெயில்காலத்தில் கேரட் அல்வாவுடன் சிறிது வெண்ணிலா ஐஸ்கிரீம், வறுத்த பாதாம்/பிஸ்தா பருப்பு சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும். பிரிட்ஜில் வைத்திருந்து இரண்டு வாரம் வரை கூட, நம் தேவைக்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.
கேரட் அல்வா செய்ய..
தேவையான பொருட்கள்:
கேரட் – 4
நெய் – 5 டேபிள் ஸ்பூன்
முந்திரி பருப்பு – 8
உலர்ந்த திராட்சை (கிஸ் மிஸ் பழம்) – 10
ஏலக்காய் – 6
கன்டென்ஸ்டு மில்க் – 1 டின்
நெய் – 5 டேபிள் ஸ்பூன்
முந்திரி பருப்பு – 8
உலர்ந்த திராட்சை (கிஸ் மிஸ் பழம்) – 10
ஏலக்காய் – 6
கன்டென்ஸ்டு மில்க் – 1 டின்
செய்முறை:
கேரட்டை தோல் சீவி துருவிக்கொள்ளவும். ஏலக்காயை பொடியாக திரித்துக்கொள்ளவும். வானலியில் நெய்விட்டு முந்திரிப்பருப்பு, உலர்ந்த திராட்சையை வறுத்து தனியே வைக்கவும். ஒரு அகன்ற பெரிய பாத்திரத்தில் நெய்யை விட்டுச் சூடாக்கவும். சூடான நெய்யில் கேரட் துருவலைச் சேர்த்து வதக்கவும். கேரட் சற்று வதங்கியபின் ஏலக்காய் பொடியையும், கன்டென்ஸ்டு மில்க்கையும் சேர்த்து கிளறவும். அடிபிடிக்காமல் இருக்க அடிக்கடி கிளறிவிட்டுக்கொண்டே இருக்கவும். கன்டென்ஸ்டு மில்க் மற்றும் கேரட்டில் உள்ள தண்ணீர்ப்பதம் படிப்படியாக குறைந்து அல்வா போல் சுருண்டு வரும் போது வறுத்து வைத்த முந்திரி, திராட்சையைச் சேர்க்கவும்.
- கேரட் அல்வா செய்ய பெரிய பாத்திரத்தை பயன்படுத்த எளிதில் தண்ணீர்ப்பதம் வற்றி அல்வா பதத்திற்கு விரைவில் வந்துவிடும்.
- கேரட் அல்வா மிக விரைவாக செய்ய நினைக்கும் நாட்களில், கேரட்டை தோல் சீவி துண்டுகளாக நறுக்கிய பின் மிக்சியில் போட்டு லேசாக திரிக்க (30 – 45 வினாடிகள் ) கேரட் துருவல் எளிதில் கிடைத்துவிடும்.
- குளிர்ச்சியாக சாப்பிடும்போது ஐஸ்கிரீம் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.
- விருப்பப்பட்டால் வறுத்த பிஸ்தா, பாதம் பருப்பும் இதில் சேர்த்துக்கொள்ளலாம்.
கருத்துகள்
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்.