மீனம்


சனி பெயர்ச்சி பலன்கள் 16.12.2014 - 20.11.2017 வரை . பூரட்டாதி 4 பாதம் , உத்திரட்டாதி 4 பாதம் முடிய , ரேவதி 4 பாதம் முடிய . பலன்கள் மதிப்பு 40%



சனி  பகவான்  மீனராசிக்கு  8ம்இடத்திலிருந்து  9ம்  இடத்துக்கு  செல்கிறார் .

கடந்த காலம்  முழுவதும்  அஷ்டம சனியால்  ரொம்பவும் பாதிக்கப்பட்டவர்கள்  மீன ராசிக்கார்கள் . ஆனால்  இந்த சனி  பெயர்ச்சி  பலன்கள்  சிறப்பாக  இல்லை  என்றாலும் , கடந்த காலம்  கஷ்டம்  இருக்காது . சனி  பகவான் மீன ராசிக்கு  11ம் இடம் , மற்றும்  12ம்  இடத்துக்கு  உரியவர் . அவர்  தற்பொழுது 10ம்  இடத்துக்கு  12ல்  சஞ்சரிக்கும்  பொழுது   வேலையில்  உள்ளவர்கள்  மாறுதல்  அடைவார்கள் . சொந்த தொழில்  செய்பவர்கள்  , அடிகடி  நிறைய  சிக்கல்களை  சந்திக்க  நேரிடும் . சனி  பகவான்  6 மாத  கால வரையில்  குரு  பகவானின்  பார்வையில்  இருப்பதால் ,   எந்த பலன்களையும்  கொடுக்க மாட்டார் .



சனி  பகவான்  விசாகம்  நட்சத்திரத்தில்  சஞ்சரிக்கும்  பொழுது  நல்ல  பலன்களை  கொடுப்பார் . குரு  பகவானின்  பார்வையில்  இருப்பதால் .



சனி  பகவான்  தன்  சொந்த நட்சத்திரமான  அனுஷத்தில்  சஞ்சரிக்கும்  பொழுது  நல்ல பலன்கள்  கொடுப்பார் . ஏனென்றால்  11ம்  இடத்து  அதிபதி  பாக்கிய ஸ்தானத்தில் , சஞ்சரிக்கும்  பொழுது  நல்ல  பணவரவு  ஏற்படும் . சுப செலவு  ஏற்பட  வாய்ப்பு  அதிகம் . சனி  பகவான் 1 வருட  காலம்  அனுஷத்தில்  இருப்பார் . இந்த  காலம் அருமையான  காலம் . வெளிநாடு  சென்று சம்பாரிக்கலாம் . 



சனி பகவான்  மீன ராசிக்கு  பாதகதிபதி  நட்சத்திரமான  கேட்டையில் சஞ்சரிக்கும் பொழுது  நல்ல பலன்கள்  நடக்க  வாய்ப்பில்லை . பிள்ளைகள்  சொல் பேச்சு  கேட்க மாட்டார்கள் . தொழில்  சிறப்பாக  இருக்காது . கூட்டு  செய்பவர்கள்  பிரிவார்கள் . இந்த காலகட்டங்களில்  தெய்வ வழிபாடு  அவசியம் .



மீன ராசிக்காரகள்  அஷ்மசனி  உச்சத்திலிருந்து  விடுதலை . கடந்த காலம்  ஏற்பட்ட  கஷ்டம்  இப்போது  ஏற்படாது . இருந்தாலும்  சிறு  சிறு பிரச்சனைகள்  வரும்  ஏனென்றால்  சனி பகவான்  உங்கள்  ராசிக்கு  12ம்அதிபதி .



பரிகாரம் 



சனிகிழமை  தோறும்  "காலபைரவர் "  சனிபகவான் " ஸ்ரீ ஹனுமான் "சன்னதி  முன்பு  தீபம்  ஏற்றி  வழி படவும் . கஷ்டங்கள்  பறந்தோடும் .




குறிப்பு  



தீபம்  ஏற்றும் பொழுது  சுத்தமான  நல்லெண்ணையை ஏற்றவேண்டும் . இதயம்   ப்ராண்ட்  நல்ல எண்ணெய்  உபயோகிங்கள் 

கருத்துகள்