- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
தேவையான பொருட்கள்
- சிக்கன் (வெட்டி சுத்தம் செய்ததுண்டுகள்) - 250 கிராம்
- பெருஞ்சீரகம் (சோம்பு) - ஒரு தேக்கரண்டி
- மிளகு - 3 தேக்கரண்டி
- வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
- சீரகம் - ஒரு தேக்கரண்டி
- மல்லி (தனியா) - ஒரு தேக்கரண்டி
- மிளகாய் வத்தல் - 2
- எண்ணெய் - 2 தேக்கரண்டி
- கடலைப்பருப்பு - அரை தேக்கரண்டி
- உள்ளி (பூண்டு) - 4 பற்கள்
- சின்னவெங்காயம் - 2
- தக்காளிப்பழம் - ஒன்று
- கருவப்பட்டை(பட்டை) - சிறிதளவு
- கறிவேப்பிலை - சிறிதளவு
- உப்பு - தேவையான அளவு
- தயிர் - சிறிதளவு
- தண்ணீர் - சிறிதளவு
செய்முறை
- ஒரு சிறியபாத்திரத்தில் தயிர், உப்பு, தண்ணீர், ஆகியவற்றை போட்டு நன்றாக கலக்கினால் மோராகிவிடும் .
- பின்பு ஒரு பெரிய பாத்திரத்தில் சுத்தமாக்கிய சிக்கன் துண்டுகளை போட்டு அதன் மேல் மோரை விடவும். இதில் உள்ள மோர் கலவையினால் சிக்கனை நன்றாக கழுவவும்.
- பின்பு அடுப்பில் வாணலியை வைத்து சூடாக்கவும். வாணலி சூடானதும் அதில் சீரகம், மல்லி, மிளகாய் வத்தல் கடலைப்பருப்பு, மிளகு ஆகியவற்றை போட்டு நன்றாக வறுக்கவும்.
- நன்றாக வறுத்த பின்பு அதில் வெந்தயத்தை போட்டு கலக்கவும். கலந்த பின்பு இறக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு ஆறவிடவும்.
- இவையாவும் ஆறிய பின்பு இதனை கிரைண்டரில்(மிக்ஸியில்) போட்டு பவுடராக்கவும்.
- பின்பு அடுப்பில் வாணலியை வைத்து அதனை சூடாக்கவும். வாணலி சூடானதும் அதில் அரை தேக்கரண்டி எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
- எண்ணெய் சூடானதும் மோரில் கழுவிய சிக்கனை போட்டு வதக்கவும்.
- வதக்கிய சிக்கனுடன் நறுக்கிய தக்காளிப்பழம், சின்ன வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு நன்றாக கலக்கவும்.
- பின்பு இவற்றுடன் பவுடராக்கியவற்றை போட்டு நன்றாக கலக்கவும்.
- கலந்த பின்பு இதனுடன் (2-3) டம்ளர் தண்ணீர் விட்டு அதனுடன் உப்பு போட்டு இவையாவற்றையும் நன்றாக வேகவிடவும்.
- பின்பு அடுப்பில் இன்னொரு வாணலியை வைத்து சூடாக்கவும்.
- சூடாக்கிய பின்பு அதில் எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
- எண்ணெய் சூடானதும் அதில் பெருஞ்சீரகம்(சோம்பு), கருவப்பட்டை(பட்டை), கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளிக்கவும்.
- தாளித்த பின்பு இவற்றை சிக்கனில் போட்டு கலக்கவும். அதன் பின்பு அதனை இறக்கி வைத்துவிடவும்.
- வாணலியை இறக்கிய பின்பு சுவையான, சத்துகள் நிறைந்த சிக்கன் சூப் தயாராகிவிடும்.
கருத்துகள்
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்.