[You must be registered and logged in to see this image.]தங்களது குழந்தைகளை நல்ல பண்புகளுடன் உருவாக்குவதே இன்றைய பெற்றோர்களின் சிறந்த கனவாக உள்ளது.நம் வாழ்க்கையுடன் ஒன்றிவிட்ட கணணியும், இணையமும் இதற்குப் பல வழிகளைத் தருகிறது.
ஒரு நல்ல கணணியும், அதற்கான பிராட்பேண்ட் இணைப்பும் இருந்தால் குழந்தைகள் தங்கள் நேரத்தை நல்ல வழிகளில் பயன்படுத்த பெற்றோர்கள் துணைபுரியலாம்.
ஒரு நல்ல கணணியும், அதற்கான பிராட்பேண்ட் இணைப்பும் இருந்தால் குழந்தைகள் தங்கள் நேரத்தை நல்ல வழிகளில் பயன்படுத்த பெற்றோர்கள் துணைபுரியலாம்.
குழந்தைகளுக்கு விளையாட்டு என்பது அவர்களின் இயற்கையோடு இணைந்த ஒன்று. அதன் வழியாகவே அவர்களின் மன வளர்ச்சியை நல்ல முறையில் உருவாக்கலாம். உலக விஷயங்களைக் கற்றுக் கொடுக்கலாம். அதற்கென உள்ள பல இணையதளங்கள் உள்ளன.
1. கல்வி விளையாட்டுக்கள், வேடிக்கையான கேம்ஸ், ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்குமான தகவல்கள், கலை அம்சம் நிறைந்த பலவற்றிற்கு 20 ஆயிரத்திற்கு மேலான இணைய தொடர்புகள், வண்ணம் தீட்டி பழக தளங்கள், கணக்கு பழக பயிற்சிகள் மற்றும் தரவிறக்கம் செய்து வைத்து விளையாட கேம்ஸ் என அனைத்து வகைகளிலும் குழந்தைகளுக்கான இணையக் களஞ்சியமாக இயங்குகிறது [You must be registered and logged in to see this link.] என்ற முகவரியில் உள்ள தளம்.
2. நூற்றுக்கணக்கில் இன்டர்நெட் இணைப்பில் விளையாட கேம்ஸ், கார்டூன், மூவி கிளிப்கள், மியூசிக் வீடியோ, புதிர்கள், கற்பனைத் திறனை ஊக்கப்படுத்தும் செயல்பாடுகள், பக்கங்களுக்குக் கலர் தீட்டுதல், பாதுகாப்பான வழிகளில் இணையத் தேடல் என வேடிக்கை விளையாட்டுக்களையும் கல்வி
கற்றலையும் இணைத்து தருகிறது [You must be registered and logged in to see this link.] என்ற முகவரியில் உள்ள இணைய தளம்.
3. [You must be registered and logged in to see this link.] என்ற தளத்தில் பல்வேறு வித்தியாசமான கேம்ஸ், வேடிக்கை விளையாட்டுக்கள், குழந்தைகளுக்கான தகவல்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் குழந்தைகளுக்குக் கற்றுத் தர விரும்பும் விஷயங்கள், நினைவாற்றலை வளர்க்கும்
விளையாட்டுக்கள் எனப் பல வகைகளில் குழந்தைகளுக்கான அனைத்து விஷயங்களும் வித்தியாசமான முறையில் தரப்பட்டுள்ளன.
4.குழந்தைகளுக்கு கணக்குகளைத் தந்து அவர்களின் சிந்திக்கும் திறனை வளர்க்கும் தளமாக விளங்குகிறது [You must be registered and logged in to see this link.] உலக அளவில் இது சிறந்த தளம் என்ற பாராட்டினைப் பல அமைப்புகளில் இருந்து பெற்றது.
குழந்தைகளுக்கு கூட்டல், கழித்தலில் தொடங்கி அல்ஜிப்ரா, பின்னங்கள், டெசிமல் கணக்குகள் என கணக்கின் அடிப்படையையும் அதன் தொடர்பான பிறவற்றையும் கற்றுத்தரும் பல தளங்கள் இணையத்தில் உள்ளன. இவை அனைத்தும் கணக்கியலை விளையாட்டுக்கள் மூலமும் புதிர்கள் மூலமும் கற்றுத் தருகின்றன.
Kids Health
மருத்துவம் பற்றி குழந்தைகளுக்கு சொல்லி தரும் தளம். "மூட்டைப்பூச்சி கடித்தால் என்ன செய்ய வேண்டும்?", "நமது உடல் பாகங்கள் எவ்வாறு செயல்படுகின்றது?" என்று பல்வேறு விஷயங்கள் இருக்கின்றன.
முகவரி: http://kidshealth.org/kid/
Kids Health
மருத்துவம் பற்றி குழந்தைகளுக்கு சொல்லி தரும் தளம். "மூட்டைப்பூச்சி கடித்தால் என்ன செய்ய வேண்டும்?", "நமது உடல் பாகங்கள் எவ்வாறு செயல்படுகின்றது?" என்று பல்வேறு விஷயங்கள் இருக்கின்றன.
முகவரி: http://kidshealth.org/kid/
கருத்துகள்
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்.