மட்டன் - அரை கிலோ
கேரட் - 2
உருளைக்கிழங்கு - 2
பெரிய வெங்காயம் - 1
பச்சைபட்டாணி - அரை கப்
கிராம்பு - 5
ஏலக்காய் - 3
பட்டை - சிறுதுண்டு
மிளகு - 5
பால் - அரை கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
உருளைக்கிழங்கு, கேரட்டினை தோல் நீக்கி துண்டுகளாக அரிந்துகொள்ளவும். மட்டனை சுத்தம் செய்து துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் கிராம்பு, ஏலம், மிளகு, பட்டை, நறுக்கிய வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும். அதில் நறுக்கி வைத்துள்ள காய்களையும், கறியையும் சேர்த்து நன்கு வதக்கவும்.
பிறகு பாலையும், மைதாமாவினையும் சேர்த்து கலந்து வேகவிடவும். அதன்பின் தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து, பச்சைபட்டாணியுடன் குக்கரில் போட்டு வேகவிடவும். வெந்ததும் இறக்கி சூடாக பரிமாறவும்
கருத்துகள்
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்.