புடலங்காய் பால் கூட்டு


தேவையானவை:  

குட்டைப் புடலை (நறுக்கியது) - ஒரு கப்,
 தேங்காய்ப்பால் - இரண்டு கப்,
 சர்க்கரை - ஒரு டீஸ்பூன், 
உப்பு - ஒரு சிட்டிகை.

தாளிக்க: 

தேங்காய் எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
 காய்ந்த மிளகாய் - ஒன்று, 
கடுகு, கறிவேப்பிலை - சிறிதளவு.

செய்முறை: 

நறுக்கிய புடலங்காயை உப்பு சேர்த்து வேகவிட்டு, தேங்காய்ப்பால் சேர்த்து இறக்கவும். தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளித்து சேர்க்கவும். பிறகு, இதனுடன் சர்க்கரை சேர்த்துப் பரிமாறவும்.

குறிப்பு: தேங்காய்ப்பால் சேர்த்துள்ளதால், விரைவில் சாப்பிட்டுவிட வேண்டும். மிச்சம் வைத்து உண்ணக் கூடாது. தேங்காய்ப்பாலுக்கு... குடல், தொண்டைப் புண்ணை ஆற்றும் சக்தி  உண்டு.

கருத்துகள்