வெஜிடபிள் சூப்

Picture


தேவையான பொருட்கள்

  • நெய்-1 டேபிள்ஸ்பூன்
  • எண்ணெய்- 1 டேபிள்ஸ்பூன்
  • கிராம்பு-2
  • ஏலம்-2
  • பட்டை- 1 சிறிய துண்டு
  • அரைத்த இஞ்சி- அரை ஸ்பூன்
  • சிறிய பூண்டு- 5 பற்கள்
  • நறுக்கிய பொதினா- 1 டேபிள்ஸ்பூன்
  • நறுக்கிய கொத்தமல்லி- 2 டேபிள்ஸ்பூன்
  • நறுக்கிய சிறிய வெங்காயம்-கால் கப்
  • நறுக்கிய தக்காளி- 1 கப்
  • மஞ்சள் தூள்- அரை ஸ்பூன்
  • வேக வைத்த பருப்பு- 1 டேபிள்ஸ்பூன்
  • புளி- நெல்லி அளவு
  • எலுமிச்சை சாறு- 1 டீஸ்பூன்
  • தேவையான உப்பு
  • கீழே உள்ளவற்றைப் கரகரப்பாகப் பொடிக்கவும்:
  • சோம்பு- 1 டீஸ்பூன், மிளகு- 1 டீஸ்பூன், சீரகம்- அரை டீஸ்பூன்
செய்முறை

  • புளியை சிறிது நீரில் ஊற வைத்து ஒரு கப் அளவு கெட்டியாக கரைத்துக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சூடாக்கி அதில் எண்ணெயையும் நெய்யையும் ஊற்றவும்.
  • பட்டை, கிராம்பு, ஏலம் இவற்றைப் போட்டு வெங்காயத்தையும் சேர்த்து வதக்கவும்.
  • சற்று வதங்கியதும் இஞ்சி, பூண்டு சேர்த்து மேலும் சில நிமிடங்கள் வதக்கவும்.
  • இப்போது தக்காளியையும் மஞ்சள் தூளையும் சேர்த்து நன்கு குழைய வதக்கவும்.
  • பொதினா, கொத்தமல்லி சேர்த்து ஒரு தடவை நன்கு கலந்து புளி நீருடன் மேலும் 5 கப் நீர் ஊற்றி தேவையான உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
  • சில வினாடிகள் கொதித்ததும் தூளைச் சேர்க்கவும்.
  • நன்கு கொதித்து வரும்போது பருப்பைச் சேர்த்து இறக்கவும்.
  • சிறிது ஆறியதும் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.

கருத்துகள்