தனுசு

சனி பெயர்ச்சி பலன்கள் 16.12.2014 - 20.11.2017 வரை . மூலம் 4 பாதம் முடிய , பூராடம் 4 பாதம் முடிய , உத்திராடம் 1ம் பாதம் மட்டும் . பலன்கள் மதிப்பு 40%



தனுசு  ராசிக்கு  சனி பகவான்  2ம் இடம்  மற்றும் 3ம் இடத்துக்கு  உரியவர் . சனி பகவானே  தனுசு  ராசிக்கு , வருமானத்தை  குறிக்கும்  கிரங்களில்  சனி பகவானும்  ஒருவர் . அவர்  கடந்த  காலம்  முழுவதும்  லாப ஸ்தானம்  என்று  சொல்லகூடிய  11ம்  இடத்தில் இருந்து  நல்ல  பலன்களை  கொடுத்துவந்தார் .

[ பிறப்பு  ஜாதகத்தில் சனி பகவான்  , கேந்திரமோ , உபஜய ஸ்தானத்தில்  இருந்தால் , கோச்சாரத்தில்  கடந்த காலம்  நல்ல பலன்கள்  கொடுத்திருப்பார் .சனி பகவான்  11ல்  உச்சம்  அதனால் ] அனால்  தற்பொழுது  ராசிக்கு  12ம் இடத்தில் ஏழரை  சனி  ஆரம்பம் . இந்த  ஏழரை சனி  காலத்தில் , உண்மையை  உணர்த்தும்  காலம் . நண்பர்கள்  , மற்றும்  உறவினர்கள் , உங்களால்  உதவி  பெற்றவர்கள் , இவர்களை  பற்றி  இந்த  ஏழரை  ஆண்டுக்குள்  நீங்கள்  தெரிந்துகொள்ளலாம் .  2ம்  அதிபதி  12ம் இடத்தில், வருமானம்  வந்தாலும்  செலவு  கட்டுக்குள்  அடங்காமல்  செலவு ஆகும் . 


சனி  பகவான்  விசாகம்  நட்சத்திரத்தில்  சஞ்சரிக்கும் பொழுது , வண்டி  வாகனங்களால்  செலவு  ஏற்படும் . மற்றும்   இருக்கும் இடத்தை  விட்டு வேறு இடத்துக்கு  செல்ல  வாய்ப்பு  உண்டாகும் . ராசிக்கு  5ம் இடத்துக்கு  8ம்  இடத்தில்  சனி பகவான்  இதனால்  குழந்தைகளுக்கு  மருத்துவ செலவு  உண்டு .


சனி பகவான்  தன் சொந்த  நட்சத்திரமான  அனுஷத்தில்  சஞ்சரிக்கும் பொழு  குடுபத்தில்  விரய செலவு  , மற்றும்   பணம்  பற்றக்குறை ஏற்படும் . குடும்பத்தில்  அமைதி  ஏற்படாது . சண்டை  , சச்சரவு  , ஏற்படும் . இந்த கால கட்டங்களில்  கடவுள்  வழிபாடு , தியானம் . மிகவும்  அவசியம் .


சனி  பகவான்  உங்கள் ராசிக்கு  1ம் இடம் , மற்றும்  10ம் இடம்  அதிபதியான புதனின்  கேட்டை  நட்சத்திரத்தில்  சஞ்சரிக்கும்  பொழுது , சொந்த தொழில் செய்பவர்கள்  , நஷ்டம்  அடைவார்கள் , மேலும் கடன்  ஏற்படும் .  வேலையிலுள்ளவர்கள்  அலை கழிக்க படுவார்கள் . ஏனென்றால்  உங்கள் ராசிக்கு  புதன்  பாதகாதிபதி  . பாதகாதிபதி  நட்சத்திரத்தில்  சஞ்சரிக்கும்  எந்த கிரகம்  ஆனாலும்   பாதகம் தான்  செய்யும் .


சனி பகவான்  பெயர்ச்சி  ஆகி  6 மாதம்  காலம்  எதுவும்  செய்யமாட்டார் . ஏனென்றால் , குருபகவானின்  5ம்  பார்வை பெறுவதால் , அமைதியாக  இருப்பார் . 6 மாதம்  கழித்து  தன் வேலையை  தொடங்குவார் .


பரிகாரம் 


சனிகிழமை , மற்றும்  அனுஷம் , உத்திரட்டாதி  , பூசம்  , இந்த  நட்சத்திர  நாட்களில்  , சனி பகவானையும் , கால பைரவரையும் , தீபம்  ஏற்றி  வழிபட்டு ,வந்தால்  கஷ்டங்கள்  விலகும் .



குறிப்பு  

தீபம்  ஏற்றும் பொழுது  சுத்தமான  நல்லெண்ணையை ஏற்றவேண்டும் . இதயம்   ப்ராண்ட்  நல்ல எண்ணெய்  உபயோகிங்கள்

கருத்துகள்