தேவையான பொருட்கள் :
- சர்க்கரை 1-1/4 கிலோ
- கடலை மாவு 1 கிலோ
- அரிசி மாவு 2 டீஸ்பூன்
- முந்திரி 20
- திராட்சை 15
- ஏலக்காய் 5
- கிராம்பு 5
- கல்கண்டு 10 கிராம்
- பேக்கிங் சோடா 1 சிட்டிகை
- கேசரி பவுடர் 1 சிட்டிகை
- பச்சை கற்பூரம் 1 சிட்டிகை
- எண்ணெய்
- பச்சை கற்பூரம்
செய்முறை:
கடலை மாவு, அரிசிமாவு, பேக்கிங்சோடா, 1 சிட்டிகை கேசரி பவுடருடன் தண்ணீர் கலந்து கட்டியில்லாமல் கரைத்து வைத்து கொள்ளவும்.
அடுப்பில் கடாய் போட்டு எண்ணெய் உற்றி, எண்ணெய் மிதமான சூடானதும், கண்கரண்டியில் மாவை ஊற்றி, பூந்தியை அதிகம் முறுகவிடாமல் பூந்தி எண்ணெயில் மிதந்து மேலே வந்தவுடனே எடுத்துவிடவும். அது போல் எல்லா மாவையும் ஊற்றி எடுத்துகொள்ளவும்.
1:1 தண்ணீர் மற்றும் சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்து பிசு பிசுப்பு வரும் வரை கொதிக்க விட்டு இறக்கவும். இறக்கியதும் ஏலக்காய் போடவும்.
வறுத்த முந்திரி, திராட்சை, கிராம்பு, பச்சைகற்பூரம் சிறிதளவு பாகு சேர்த்து பூந்தியில் நன்றாக கலக்கவும். சிறிது நேரம் கழித்து கல்கண்டு சிறிது பாகு சேர்த்து கலக்கவும்.
பாகு அதிக சூடு இல்லாமலும் ஆறிவிடாமலும் இருக்க வேண்டும். அதில் பூந்தியை போட்டு ஊற விடவும். ஒரு 1/2 மணி நேரம் கழிந்ததும். மிதமான சூட்டுடன் கையில் எண்ணெய் அல்லது நெய் தடவி கொண்டு உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.
இப்பொழுது சாப்பிட சுவையான லட்டு ரெடி.
படித்து முடித்து விட்டு மறக்காமல் உங்கள் கமெண்ட்களை எழுதி அனுப்புங்கள். உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் பண்ணவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்.