சனி பெயர்ச்சி பலன்கள் 16.12.2014 - 20.11.2017 வரை . அவிட்டம் 3,4 பாதம் மட்டும் , சதயம் 4 பாதம் முடிய , பூரட்டாதி 1,2,3, பாதம் வரை . பலன்கள் மதிப்பு 45%
கும்ப ராசிக்கு சனி பகவான் 10ம் இடத்துக்கு வருகிறார் . இது சனி பகவானுக்கு பகை வீடு . கடந்தகாலம் முழுவதும் சனி பகவான் 9ம்இடத்தில இருந்து தொழில் சம்பந்தமான பிரச்சனைகளை கொடுத்திருப்பார் . ஏனென்றால் அவர் அமர்ந்த நட்சத்திரம் சித்திரை இது செவ்வாயின் நட்சத்திரம் . கும்ப ராசிக்கு செவ்வாய் 10ம் இடத்து அதிபதி .சனிபகவான் 10ம் இடத்துக்கு 12ல் செவ்வாய் சாரம் பெற்று கடந்த காலம் சஞ்சரித்ததால் , செய்த தொழிலில் விரயம் ஏற்பட்டு இருக்கும் . கும்ப ராசிக்கு சனி பகவான் 1ம் இடம் மற்றும் 12ம் இடத்துக்கும் உரியவர் . அதனால் எந்த இடத்தில் உள்ளாரோ , அந்த இடத்துக்கு 12ம் இடத்து பலனையும் கொடுப்பார் . இப்போது சனி பகவான் 10 ம் இடத்தில் சஞ்சரிக்கும்போழுது வேலையில் உள்ளவர்கள் வேறு இடத்துக்கு மாறுவார்கள் . வேலை சம்பந்தமாக , தொழில் சம்பந்தமாக ,கண்டிப்பாக வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும் .
சனி பகவான் , குருபகவானின் நட்சத்திரமான விசாகத்தில் சஞ்சரிக்கும் பொழுது , குடும்பத்தில் செலவு அதிகரிக்கும் . மேலும் கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படும் . குரு பகவான் 2ம் இடம் , 11ம்இடத்துக்கு உரியவர் . அவர் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும்பொழுது , தொழிலில் லாபம் கிடைக்காது .
சனி பகவான் தன் சொந்த நட்சத்திரமான அனுஷத்தில் சஞ்சரிக்கும்போழுது , சொந்த தொழில் செய்பவர்கள் , நல்ல லாபம் கிடைக்கும் .மேலும் வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும் . இந்த நட்சத்திரத்தில் சனி பகவான் சஞ்சரிக்கும் பொழுது நல்ல பலன்களை வாரி வழங்குவார் .
சனி பகவான் கேட்டை நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் பொழுது , பிள்ளைகளால் செலவு உண்டாகும் . வருமானம் நன்றாக இருக்கும் . கௌரவம் உயரும் . அஷ்டம சனியால் இழந்ததை இந்த இரண்டரை வருடம் சம்பாரித்துவிடலாம் .
சனி பகவான் 7ம் இடத்துக்கு 4ம் இடத்தில் சஞ்சரிப்பதால் மனைவிக்கு மருத்துவ செலவு உண்டாகும் .அறுவை சிகிச்சை நடக்க வாய்ப்பு உள்ளது .
பரிகாரம்
சனிகிழமை தோறும் , சனி பகவானுக்கும் , ஸ்ரீ ஹனுமானுக்கும் , தீபம் ஏற்றவும் .
குறிப்பு
தீபம் ஏற்றும் பொழுது சுத்தமான நல்லெண்ணையை ஏற்றவேண்டும் . இதயம் ப்ராண்ட் நல்ல எண்ணெய் உப
கருத்துகள்
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்.