பெயரை பார்த்தவுடன் கொஞ்சம் உஷாராக இருந்திருக்க வேண்டும், என்ன செய்வது, ஆர்வக் கோளாறு! படத்திற்கு போய் விட்டோம். விஜய்க்கும், பஞ்சாயத்துக்கும் இருக்கும் பிணைப்பு போலவே, விஜய்க்கும் ப்ளப்பிற்கும் இருக்கும் பிணைப்பும் ரொம்ப ஸ்ட்ராங்காகவே இருக்கிறது.
படத்தின் கதை நன்றாக புரிந்தாலும், உலகமே உற்சாகமாக கொண்டாடிய சுறா படத்தை ஏன் மறுபடியும் முருகதாஸ் எடுத்தார் என்பதுதான் புரியவில்லை. இரட்டை வேட விஜய், நாயகி சமந்தா, ஒரே இயக்குனரிடம் விஜய்க்கு இரண்டாவது படம், என சில, பல தமிழ் சினிமா மொக்கை படங்களின் கடந்த கால செண்டிமெண்ட்களும் உடன் சேர்ந்து படத்தை ஒரு "பக்கா விஜய் படமாக" செய்து விட்டன. இடைவேளையின் போது கூட "உயிர் மேல ஆசை இருந்தா ஓடி போய்டு"ன்னு விஜய் சொன்னார். நாம்தான் கேட்கவில்லை.
கொல்கத்தா சிறையிலிருந்து மொக்கையாக போலீஸை ஏமாற்றி தப்பிக்கும் கதிரேசன் விஜய், சென்னைக்கு வருகிறார். சென்னையில் இருந்தபடி பாங்காக் செல்ல முயற்சி செய்யும் கதிரேசன் தன்னை போல் உருவம் கொண்ட இன்னொரு விஜய் ஜீவானந்தம் சிலரால் சுடப்பட்டு மருத்துவமனியில் இருப்பதை கண்டு, ஜீவானந்தமாகஆள்மாறாட்டம் செய்கிறார். ஆனால் அந்த ஜீவானந்தம் தனது தன்னூத்து கிராமத்தின் வறட்சியை காரணமாக வைத்து ஒரு வெளிநாட்டு கார்ப்ரேட் கம்பெனி ஆட்டையை போடுவதை தடுத்து நாட்டையும் ஸாரி... ஊரையும், மக்களையும் காப்பாற்ற போராடும் ஒரு குட்டி கூடாங்குளம் உதயகுமார் போன்ற "தலைவன்!" என தெரிந்து கதிரேசன் ஜீவானந்தமாக மாறி அந்த ஊரையும் ஊர் மக்களையும் எப்படி காப்பாற்றினார் என்பதே கதை. ஆனால் பாவம் நம்மளை காப்பாற்றதான் ஆள் இல்லாமல் முருகதாஸிடம் மாட்டி வதை படுகிறோம்.
சமந்தா! பாவம் பொண்ணு, ஏற்கனவே மொத்த வித்தையையும் இறக்குனது போக மிச்ச மீதி வித்தையை கத்தியில இறக்கியிருக்கு. ஆனா ரசிகனுக்குதான் குரங்காட்டியின் குரங்கை பார்த்த ஃபீல். தம்பி அனிருத் நல்லா பப்ளிஸிட்டி மட்டும் பண்ணுறீங்க, கொஞ்சம் முயற்சி செய்து நல்ல இசையை குடுத்திருக்கலாம். பாவம் நீங்க என்ன பண்ணுவீங்க உங்ககிட்ட வித்தையை வாங்குனவுங்க அப்பிடி. காமெடிக்கு சதீஷ், வில்லனாக நீல் நிதின் முகேஷ். ரெண்டு பேரும் பண்ணும் காமெடி ரொம்ப ரொம்ப சூப்பர்.
"ஒரு தடவை முடிவு பண்ணிட்டா, தன்னோட பேச்சை தானே கேட்பதில்லை" என்பதில் விஜய் மிக பிடிவாதமாக இருப்பது தலலவா வந்ததிலிருந்து நன்றாகவே தெரிகிறது. பாவம் முருகதாஸ், அவரின் எல்லா படங்களுக்கும் ஏற்படும் கதை திருட்டு பிரச்சினையிலிருந்து சட்ட ரீதியாக வெளியில் வந்தவருக்கு, ரசிகர்கள் தீர்ப்பு என்ன்வோ காலத்திற்கே வெளிச்சம். லைக்காவை வைத்து இன்னும் சில படங்கள் இயக்கினால் கோடீஸ்வர தமிழ் விரோதி ஒருவரை ஏழையாக்கிய புண்ணியம் வந்து சேரட்டும். லைக்கவிற்கு செட்டில்மெண்ட் பணம் கிடைத்தாலே பெரிய விஷயம். படத்தின் பட்ஜெட் பிறகு பார்க்கலாம்.
கருத்துகள்
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்.