தேவையான பொருட்கள் :
தக்காளி - 2 கப் (பொடியாக நறுக்கியது)
வெங்காயம் - 1 கப் (பொடியாக நறுக்கியது)
உருளைகிழங்கு - 1 கப் (சதுரங்கள்)
முட்டை கோஸ் - 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
பார்லி - 1 டேபிள்ஸ்பூன் (வேகவைத்தது)
ஆலிவ் எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
பொடி உப்பு - 1/4 டீஸ்பூன்
பொடித்த மிளகு - 1/4 டீஸ்பூன்
செய்முறை :
ஒரு கப் தக்காளி, 1/2 கப் வெங்காயம், உருளைகிழங்கை 3 கப் தண்ணீரில் உப்பு சேர்த்து ப்ரெஷர் குக்கரில் வேகவைக்கவும்.வேகவைத்தபின், அதை நன்றாக ஆறவைத்து, அரைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி, மீதமுள்ள வெங்காயத்தை நன்றாக வதக்கவும்.
நறுக்கிய முட்டை கோஸை அதில் சேர்த்து நன்றாக வதக்கவும். மீதமுள்ள தக்காளி, ராஜ்மா, பார்லி சேர்த்து 1/2 கப் தண்ணீர் மற்றும் உப்பு-மிளகு சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து, அரைத்த விழுதையும் சேர்த்து கொதிக்க வைத்து அடுப்பிலிருந்து இறக்கி சூடாக பரிமாறவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்.