- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
தேவையான பொருட்கள்
கோழி துண்டுகள் ஒரு கிலோ
வெங்காயம் பெரியதாக ஒன்று
தக்காளி இரண்டு
பச்சைமிளகாய் ஒன்று
எண்ணெய் 100 மிலி
பட்டை 1 இன்ச் அளவு
இஞ்சி,பூண்டு விழுது 2 தேக்கரண்டி
மஞ்சள்த்தூள் 1/2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் 1 1/2 தேக்கரண்டி
கரம்மசாலாத்தூள் 1/2 தேக்கரண்டி
சோம்புத்தூள் 1 தேக்கரண்டி
மல்லி,புதினா தழை சிறிதளவு
கறிவேப்பிலை ஒரு கொத்து
உருளைகிழங்கு ஒன்று
அரைக்கதேங்காய் துருவல் ஒரு கப்
முந்திரி 5
மிளகுத்தூள் 2 தேக்கரண்டி
சீரகத்தூள் 2 தேக்கரண்டி
மல்லித்தூள் 3 தேக்கரண்டி
செய்முறை :
கோழியை நன்கு சுத்தம் செய்து விட்டு மஞ்சள் தூள் சிறிது போட்டு நன்கு மூன்று நான்கு முறை கழுவி வைத்துக் கொள்ளவும்.
வெங்காயம். தக்காளி இவைகளை நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளவும். உருளையை தோல் சீவி கழுவி விட்டு பெரியதாக இருந்தால் ஆறு துண்டுகளாகவும்,சிறியதாக இருந்தால் நான்கு துண்டுகளாகவும் வெட்டி கொள்ளவும்.
குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய்,நெய் ஊற்றி சூடு வந்ததும்,பட்டை போட்டு அரிந்த வெங்காயத்தையும் சேர்த்து வதக்கவும்.
பிறகு இஞ்சி,பூண்டு விழுதை சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும். நன்கு பொன்னிறமாக வதங்கியதும் தக்காளி, பச்சைமிளகாயும், அரிந்து கழுவிய மல்லி புதினா தழையையும், கறிவேப்பிலையையும் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
அதன் பின் தூள் வகைகளை போட்டு கிளறி விட்டு சிக்கனையும்,ஒரு ஸ்பூன் உப்பையும் போட்டு நன்கு ஒன்று சேர கிளறி மிதமான தீயில் ஐந்து நிமிடம் வதங்க விடவும்.( எவ்வளவு நன்றாக வதங்க விடுகிறோமோ அவ்வளவு நன்றாக குழம்பு அமையும்)
அதற்க்குள் அரைக்க கொடுத்தவைகளை நைசாக அரைத்து கொள்ளவும்.
பிறகு வதங்கிய சிக்கனில் அரைத்தவற்றை இரண்டு டம்ளரில் கரைத்து ஊற்றி தேவையான அளவு உப்பும்,கிழங்கும் சேர்த்து மிகவும் தண்ணியாக இல்லாமல் கெட்டியாகவும் இல்லாமல் திட்டமாக இருக்கும்படி பார்த்து குக்கரை மூடி ஸ்டீம் வந்ததும் வெய்ட் போட்டு மிதமான தீயில் பத்து நிமிடம் வைத்து இறக்கவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்.