- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
தேவையானவை :
- துவரம் பருப்பு: 1 ½ கப் வேகவைத்து மசித்துக்கொள்ளவும்
- வெண்டைக்காய்: 100 கிராம், 1 இன்ச் நிளமாக நறுக்கவும்
- சாம்பார் வெங்காயம்: 8-12 தோல் உரித்தது
- தக்காளி: 4 சிறிதாக நறுக்கியது
- பச்சை மிளகாய் : 2 கீறிக்கொள்ளவும்
- புளி : சிறிய நெல்லி அளவு
- சாம்பார் தூள் : 4 தேக்கரண்டி
- மஞ்சள் தூள்: 1 தேக்கரண்டி
- உப்பு : தேவைக்கேற்ப்
தாளிக்க தேவையானவை :
- எண்ணெய்/நெய் : 1 மேசைக்கரண்டி
- கடுகு : 2 தேக்கரண்டி
- வெந்தயம்: 1 தேக்கரண்டி
- சிரகம் :2 தேக்கரண்டி
- பெருங்காயத்தூள்: 1 சிட்டிகை
- கறிவேப்பிலை: 1 தேவையான அளவு
- கொத்தமல்ல தழை :1 பிடி சிறிதாக நறுக்கியது
செய்முறை:
குழம்பு வைக்கும் பாத்திரத்தில் எண்ணெய் அல்லது நெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வெந்தயம், சிரகம், பெருங்காயத்தூள், சேர்த்து பொறியவிடவும், பின்னர் சாம்பார் வெங்காயம், நறுக்கிய வெண்டைக்காய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்,
காய் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும், வதங்கியதும் புளியுடன், உப்பு , மஞ்சள் தூள், சாம்பார் தூள் தண்ணீர் சேர்த்து கரைத்து காயில் ஊற்றி வேகவைத்த பருப்பை சேர்க்கவும் நன்கு கொதி வந்ததும் பின்னர் மல்லி தழை தூவி இறக்கவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்.