மனதை புத்துணர்ச்சியுடன் வைக்கும் சிறந்த உணவுகள்!!!



சிலரது மனநிலை மிகவும் மந்தமாக, புத்துணர்ச்சியின்றி இருக்கும். இவற்றிற்கு காரணம் அதிகப்படியான வேலைப்பளுவும், அதிக கோபமும் தான் காரணம். மேலும் உடலில் மூளையை புத்துணர்ச்சியுடன் வைக்கும் சில ஹார்மோன்களான செரோடோனின், எண்டோர்பின், டோபமைன் போன்றவை சரியான அளவில் சுரக்காததே ஆகும். இவ்வாறு மனதை ஆரோக்கியத்துடனும், புத்துணர்ச்சியுடனும் வைக்கும் ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்கு ஒரு சில உணவுகளை சாப்பிடுவதன் மூலம் சரிசெய்து விடலாம். 

இத்தகைய ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்கு பொட்டாசியம், மக்னீசியம், கார்போஹைட்ரேட், புரோட்டீன், செலினியம் போன்ற சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். இதற்காக கஷ்டப்பட வேண்டாம். அத்தகைய உணவுப் பொருட்கள் என்னவென்று சிலவற்றை பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, அந்த உணவுப் பொருட்களை சாப்பிட்டு, மனநிலையை சந்தோஷமாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்துக் கொள்ளுங்கள். 

ஸ்ட்ராபெர்ரி 

ஸ்ட்ராபெர்ரியில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இது நரம்புகளை சீராக வைக்க உதவுகிறது. மேலும் இதில் அதிகப்படியான வைட்டமின் சி இருப்பதால், இதனை சாப்பிடும் போது, மனமானது புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

வாழைப்பழம் 

ஸ்ட்ராபெர்ரியைப் போன்றே, வாழைப்பழத்திலும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. அதுமட்டுமின்றி, இதில் மக்னீசியம் அதிகம் உள்ளது. மேலும் இதில் உள்ள இயற்கை இனிப்பானது, இரத்தத்திற்கு ஒரு புத்துணர்வை ஏற்படுத்தி, உடலில் இரத்தத்தை சீராக பாய வைக்கும். அதிலும் இதில் உள்ள மாச்சத்துள்ள கார்போஹைட்ரேட், மனதை புத்துணர்ச்சசியுடன் வைக்க உதவுகிறது. 

சூரியகாந்தி விதை 

சூரியகாந்தி விதைகளில் செலினியம் மற்றும் மக்னீசியம் அதிகம் உள்ளது. உண்மையில், இந்த பொருட்கள் நிறைந்த உணவுகளை சாப்பிட்டால், உடனே மனதிற்கு ஒருவித அமைதி கிடைத்து, மனம் மகிழ்ச்சியுடன் இருக்கும். மேலும் இதில் உள்ள அமினோ ஆசிட், மூளையை புத்துணர்ச்சியுடன் வைக்க உதவும் செரோடோனின் உற்பத்தியை அதிகரிக்கும். தக்காளி தக்காளியில் எவ்வளவு தான் மற்ற நன்மைகள் நிறைந்தாலும், மூளைக்கு ஏற்ற உணவுப் பொருட்களில் தக்காளியும் ஒன்று. இவற்றில் லைகோபைன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருப்பதால், அது மூளைக்கு ஏற்படும் பிரச்சனையை தடுக்கும். 

கற்பூரவள்ளி 

கற்பூரவள்ளியில் காஃபியிக் ஆசிட், குவர்சிடின் மற்றும் ரோஸ்மாரினிக் ஆசிட் போன்றவை உள்ளது. இவை மனஇறுக்கத்தை குறைக்கும் பொருட்கள், எனவே கற்பூரவள்ளியை உணவில் சேர்த்து வந்தால், மனம் ரிலாக்ஸ் ஆக இருக்கும். டார்க் சாக்லெட் அனைவருக்குமே டார்க் சாக்லெட்டை நன்கு தெரியும். இதில் உள்ள அனடாமைன், மூளைக்கு இரத்த ஓட்டத்தை அதிகரித்து, கவனத்தை அதிகரித்து, மூளையின் சக்தியையும், சரியான மனநிலையையும் வைக்கும். மேலும் இதில் கலோரிகள் அதிகம் இருப்பதால், இதனை அளவாக சாப்பிடுவது நல்லது. 

முட்டை 

முட்டையில் ஜிங்க், வைட்டமின் பி, அயோடின், ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மற்றும் புரோட்டின் உள்ளது. இந்த பொருட்கள் அனைத்துமே மூளையின் ஆரோக்கியத்திற்கு ஏற்றது. மேலும் இவை புத்துணர்வான மனநிலையையும் வைக்க உதவும். அஸ்பாரகஸ் அஸ்பாரகஸில் ஃபோலேட் மற்றும் ட்ரிப்டோபேன் அதிகம் நிறைந்துள்ளது. உடலில் ஃபோலேட் அளவானது குறைவாக இருந்தால் தான், மந்தமான நிலை ஏற்படும். மேலும் ட்ரிப்டோபேன் என்னும் பொருளானது, செரோடோனின் அளவை அதிகரித்து, மூளையை புத்துணர்ச்சியுடன் வைக்கும். 

பால் பொருட்கள் 

பால் பொருட்களில் புரோட்டீன் அதிகம் இருக்கிறது. பொதுவாக புரோட்டீனானது அமினோ ஆசிட்டுகளால் ஆனது. அநத் அமினோ ஆசிட்டுகள், உடலில் உள்ள சக்தியை அதிகரிப்பதோடு, மனநிலையையும் அமைதியாக வைக்கும். எனவே பால் பொருட்களான பால், சீஸ், தயிர் போன்றவற்றை சாப்பிட வேண்டும். 

தேன் 

இயற்கை இனிப்புகளுள் ஒன்றான தேன், உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. தேனில் உள்ள குவெர்செடின், மூளையில் உள்ள காயங்களை குணப்படுத்த வல்லது. மேலும் தேனை விரும்பி சாப்பிட்டால், மன அழுத்தம் குறைவதோடு, மூளையும் ஆரோக்கியத்துடன் இயங்கும். குறிப்பாக தேன், உடலில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைக்க உதவும். 

தேங்காய் 

தேங்காயில் நடுத்தர சங்கிலியான ட்ரைகிளிசரைடுகள் உள்ளன. இவை ஒரு ஸ்பெஷலான கொழுப்புக்கள் என்பதால், அவை மனநிலை நன்கு வைப்பதோடு, உடல் முழுவதற்கும் மிகவும் சிறந்தது. 

மீன் 

மீனிலும் புரோட்டீன் அதிகம் உள்ளது. எனவே மன அழுத்தத்தைப் போக்குவதற்கு, மீனை அடிக்கடி உணவில் சேர்ப்பது நல்லது. 

கார்போஹைட்ரேட்டுகள் 

கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளை சாப்பிட்டாலும், செரோடோனின் என்னும் மூளையை புத்துணர்ச்சியுடன் வைக்கும் ஹார்மோன்களின் உற்பத்தியானது அதிகரிக்கும். எனவே கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளான தானியங்களால் ஆன பிரட், ரொட்டி, பரோட்டா போன்றவற்றை அதிகம் சாப்பிடலாம். 

காப்ஃபைன் 

அதிக டென்சனுடன் இருக்கும் போது, காப்ஃபைன் உள்ள காபி அல்லது டீ குடித்தால், நிச்சயம் டென்சன் நீங்கி, மனம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். ஆனால் அளவுக்கு அதிகமாக குடித்தால், பின் அது கேடு விளைவிக்கும். 

இறைச்சி 

இறைச்சியிலும் போதுமான அளவில் புரோட்டீன் நிறைந்துள்ளது. எனவே வாரத்திற்கு ஒரு முறை சிக்கன், மட்டன், மாட்டிறைச்சி போன்றவற்றை சேர்ப்பதன் மூலம் மனதை அமைதியாகவும், புத்துணர்ச்சசியுடனும் வைத்துக் கொள்ள முடியும். 

இனிப்புகள் 

பொதுவாக வாய்க்கு சுவையாக இருக்கும் இனிப்பு பொருட்களை சாப்பிட்டால், அது எண்டோர்பின் உற்பத்தியை அதிகரித்து, மனதை மகிழ்ச்சியோடு வைக்கும். எனவே எந்த ஒரு இனிப்பு உணவுப் பொருளையும் அளவாக சாப்பிட்டு, நன்மையை பெறுவது நல்லது. 
ஆரஞ்சு ஜூஸ் 

ஃபோலிக் ஆசிட் குறைபாடும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும். ஏனெனில் இந்த குறைபாடு, செரோடோனின் அளவை குறைத்து, மனதை ஒருவித அழுத்தத்தில் உள்ளாக்கும். எனவே மந்தமான மனநிலை இருக்கும் போது, ஒரு டம்ளர் ஆரஞ்சு ஜூஸ் குடித்து வந்தால், மனதை புத்துணர்ச்சியுடன் வைக்கலாம்.

கருத்துகள்