வாழைப் பூ கூட்டு






தேவையானவை:

வாழைப் பூ - 1
துவரம் பருப்பு - 100 கிராம்  
சாம்பார் பொடி - 1 1/2 ஸ்பூன் 

புளிக் கரைசல் - சிறிய  எலுமிச்சை அளவு புளி எடுத்து சிறிதளவு தண்ணீர் விட்டு 
கெட்டியாக கரைக்கவும்.

பச்சை மிளகாய் - 1
உளுத்தம் பருப்பு, வர மிளகாய், கடுகு, பெருங்காயம் - தாளிக்க

கருவேப்பிலை - சிறிது 
மஞ்சள் பொடி - சிறிது 
தக்காளி - விரும்பினால் 

செய்முறை:

துவரம் பருப்பை வேக வைக்கவும். 

வாழைப் பூவை கள்ளன் நீக்கி ஆய்ந்து, பொடிப் பொடியாக நறுக்கி  மோர் கலந்த 
தண்ணீரில் போடவும். மோர் சேர்க்கவில்லை என்றால் வாழைப் பூ கறுத்து விடும்.

நறுக்கிய வாழைப் பூவை புளி ஜலத்தில் வேக வைக்கவும்.

ஒரு கொதி வந்தவுடன் சிறிது மஞ்சள் பொடி, ஒரு ஸ்பூன் சாம்பார் பொடி, உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.


வாழைப் பூ நன்கு வெந்தவுடன், துவரம் பருப்பை சேர்த்து, மிதமான தீயில் வைக்கவும்.

கூட்டு கெட்டியானவுடன் தாளித்து கொட்டி, இறக்கவும்.

கூட்டு நீர்த்து இருந்தால், சிறிது அரிசி மாவை கால் டம்ளர் தண்ணீரில் கரைத்து கொட்டி 
கொதி வந்ததும் இறக்கவும்.

காரம் தேவைப் படுபவர்கள்  வாழைப் பூவோடு ஒரு பச்சை மிளகாய் கீறி சேர்த்து 
வேக வைக்கலாம்.

பருப்பு ரச  சாதத்திற்கு, வாழைப் பூ கூட்டு தொட்டு சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

விரும்பினால் ஒரு தக்காளி பொடியாக நறுக்கி, வாழைப் பூவோடு சேர்த்து வேக 
வைத்து போடலாம்.

கருத்துகள்