பருப்புக்கீரை குழம்பு

bo351
தேவையானவை: 
பருப்புக்கீரை – ஒரு கட்டு (கழுவிபொடியாக நறுக்கவும்),
துவரம்பருப்பு – முக்கால் கப்,
பூண்டு – 2 பல்,
வெங்காயம்தக்காளி – 1,
மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்,
கடுகுசீரகம்– ஒரு டீஸ்பூன்,

உளுத்தம்பருப்பு– ஒரு டீஸ்பூன், 
தனியாத்தூள் – ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 3,
பச்சை மிளகாய் – 2,
சின்ன வெங்காயம் – 5,
புளி – நெல்லிக்காய் அளவு,
குழம்பு பொடி – 2 டீஸ்பூன்,
கறிவேப்பிலைகொத்தமல்லி – சிறிதளவு,
எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை: 
தக்காளிவெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டுதுவரம்பருப்புகீரை,தக்காளிஉரித்த பூண்டு பல்கீறிய பச்சை மிளகாய்,பாதி அளவு சின்ன வெங்காயம்மஞ்சள்தூள் போட்டு,தேவையான அளவு தண்ணீர் ஊற்றிவேக வைத்து எடுக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டுகாய்ந்ததும் கடுகு,உளுத்தம்பருப்பு தாளித்து… மீதமுள்ள வெங்காயம்,காய்ந்த மிளகாய்சீரகம்தனியாத்தூள்கறிவேப்பிலை,குழம்பு பொடிஉப்பு போட்டு வதக்கிபுளியைக் கரைத்து விடவும். கடைசியில் நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து வதக்கிவேக வைத்த பருப்புக் கலவையில் கொட்டிக் கடைந்துசிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கவும்.

கருத்துகள்