தேவையானவை:
முந்திரி – 100 கிராம் (பொடிக்கவும்),
சர்க்கரை – 100 கிராம்,
லிக்விட் குளூக்கோஸ் – அரை டீஸ்பூன்,
கலர் வகைகள் – சிறிதளவு,
தண்ணீர் – 50 மில்லி,
பால் – சிறிதளவு (அழுக்கு நீக்க).
செய்முறை:
சர்க்கரையும் தண்ணீரையும் சேர்த்துக் கலந்து கொதிக்க வைத்து… சிறிது பால்விட்டு, அழுக்கை வடிகட்டி, பின் மீண்டும் கடாயில் விடவும். மெல்லிய கம்பிப்பதம் வந்தபின், பொடித்த முந்திரியைச் சேர்த்துக் கொதிக்கவிடவும். கைவிடாமல் கிளறவும். பின்னர் லிக்விட் குளூக்கோஸை சிறிதளவு தண்ணீரில் கரைத்து இதனுடன் கலக்கிக் கிளறவும். தோசை மாவு பதத்துக்கு வந்தவுடன் கீழே இறக்கி வைத்து ஆறவிடவும்.
சப்பாத்தி மாவு பதத்துக்கு சுருண்டு வந்தவுடன் சிறுசிறு பகுதிகளாக பிரித்து சிலவற்றில் பச்சை, சிவப்பு கலரைச் சேர்த்து பூக்களாக வடிவமைக்கவும் (வெள்ளை உருண்டைகளை கிண்ணம் போல செய்து… பச்சை அல்லது சிவப்பு உருண்டைகளை அதன் உள்ளே வைத்து கத்திரிக்கோல் கொண்டு வெட்டினால் பூ வடிவம் கிடைக்கும்). ஜரிகை பேப்பர் கொண்டு அலங்கரிக்கவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்.