- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
இது ஆறு,குளம் உள்ள பகுதிகளில் கிடைக்கும்.துடிக்க துடிக்க ஃப்ரெஷாக வாங்கி தான் சமைத்து சாப்பிடனும்.அப்பதான் ருசியாக இருக்கும்.
மீனை நன்கு உரைத்து கழுவி கட் செய்து கொள்ளவும்.உப்பு,மஞ்சள் தூள் போட்டு கழுவி எடுக்கவும்.
அரைகிலோ மீனுடன் ஒரு டீஸ்பூன் குவியலாக மிளகாய்த்தூள்,கால்- அரைடீஸ்பூன் மிளகுத்தூள்,கால் டீஸ்பூன்- மஞ்சள் சீரகத்தூள்,பூண்டு தட்டியது 5 பல் ,தேவைக்கு உப்பு சேர்க்கவும்.
எல்லாதூண்டுகளிலும் படுவது போல் கலந்து பிசறி ஒரு மணி நேரம் வைக்கவும்.
ஒரு சாலோ ஃப்ரை பேனில் 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மீனைப்போடவும்.
திருப்பி போட்டு சிவக்க பொரித்து எடுக்கவும்.சுவையான பொரிச்ச மீன் ரெடி.
கருத்துகள்
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்.