தேவையானவை:
- சிக்கன் – அரை கிலோ
- தயிர் – 1 கப்
- பெரிய வெங்காயம் – 2
- எலுமிச்சைபழம் – பாதி மூடி
- ஏலக்காய் – 1
- பட்டை – 1
வற்றல் – 10
- பூண்டு – 1
- இஞ்சி – ஒரு துண்டு
- மிளகு – 10
- சீரகம் – ஒரு ஸ்பூன்
- கிராம்பு – 8
- கசகசா – ஒரு ஸ்பூன்
- எண்ணெய் – தேவையான அளவு
- உப்பு – சிறிதளவு
செய்முறை:
முதலில் கறியை பெரிய துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும். பின்பு ஒரு பாத்திரத்தில் கறியைப் போட்டு அதனுடன் தயிர், உப்பு, மஞ்சள்த்தூள் இவை மூன்றையும் பிசறி அரைமணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். பின்பு பெரிய வெங்காயத்தை சின்ன சின்னதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
அதன்பிறகு ஏலக்காய், பட்டை, வற்றல், பூண்டு, இஞ்சி, மிளகு, சீரகம், கிராம்பு, கசகசா இவை எல்லாவற்றையும் மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். வானலியில் எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயத்தைப் போட்டு நன்றாக வதக்க வேண்டும். அதன்பிறகு அரைத்த மசாலாவைப் போட்டு அதனுடன் போட்டு கொஞ்சம் தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும்.
பின்பு அதில் கறியைப் போட வேண்டும். வெந்தபின் எலுமிச்சைபழம் பிழிந்து அதில் ஊற்ற வேண்டும். கடைசியில் மசாலா வற்றி எண்ணெய் தெளியவும் இறக்கவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்.