சனி பெயர்ச்சி பலன்கள் 16.12.2014 - 20.11.2017 வரை. விசாகம் 3ம் பாதம், அனுஷம் 4 பாதம் முடிய , கேட்டை 4 பாதம் முடிய . பலன்கள் மதிப்பு 25 %
சனி பகவான் விருச்சிக ராசிக்கு பகை பெற்றவர் . ராசிக்கு 3ம் இடம் மற்றும் 4ம் இடத்துக்கு உரியவர் . விருச்சிக ராசி ஸ்திர ராசி . ஸ்திர ராசிக்கு 3ம் இடம் மற்றும் 8ம் பாதகமான இடம் . 3ம் இடத்துக்கு உரியவர் சனி பகவான் விருச்சிக ராசிக்கு பாதகம்தான் செய்வார் . விருச்சிக ராசிக்கு ஏழரை சனி இரண்டரை வருடம் மட்டும் முடிந்துள்ளது . இன்னும் 5 ஆண்டுகள் மீதி உள்ளது . இப்போது ஜென்ம சனி . இந்த இரண்டரை வருடம் மிகவும் சோதனையான காலம் . இந்த காலகட்டங்களில் தொழில் நஷ்டம் ஏற்படும் . சொந்த தொழில் செய்பவர்கள் தொழிலை மூடும் நிலை ஏற்படும் . கடன்களால் நிம்மதி இருக்காது . கௌரம் , அந்தஸ்துக்கு , சோதனையான காலம் . மனைவிடம் சண்டை , சச்சரவு , ஏற்படும் . மருத்துவ செலவு ஏற்படும் . தாய்க்கு உடல் நிலை பாதிக்கும் .
சனி பகவான் பெயர்ச்சி ஆகி 6 மாத காலம் எதுவும் செய்ய மாட்டார் . குரு பகவான் 5ம் பார்வை பெற்று இருப்பதால் நல்ல பலன்களை கொடுப்பார் . குரு பெயர்ச்சி ஆன உடன் ,சனி பகவான் ஜென்ம சனி வேலையை தொடங்குவார் .
சனி பகவான் , குரு பகவானின் விசாகம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் போது ,பணத்தட்டுப்பாடு ஏற்படும் . பிள்ளைகளால் விரய செலவு உண்டாகும் .கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாது .
சனி பகவான் சொந்த நட்சத்திரமான அனுஷத்தில் சஞ்சரிக்கும் பொழுது , இடம் சம்பந்தமான பிரச்சனைகள் உண்டாகும் . வண்டி வாகனங்களால் விரய செலவு ஏற்படும் . தாய்க்கு உடல் நிலை பாதிக்கும் . இதனால் மருத்துவ செலவு உண்டாகும் .
சனி பகவான் புதனின் நட்சத்திரமான கேட்டையில் சஞ்சரிக்கும் பொழுது .செய்யும் தொழிலில் நஷ்டம் ஏற்படும் . இதனால் தொழிலை மூடும் நிலை உண்டாகும் . வேலையில் உள்ளவர்கள் வேலையை விடும் நிலை ஏற்படும் .வம்பு , வழக்கு , நீதிமன்றம் வரை செல்லும் நிலை ஏற்படும் .
பரிகாரம்
சனிகிழமை தோறும் "காலபைரவருக்கு " தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் ஜென்ம சனி கஷ்டம் குறையும் .
குறிப்பு
தீபம் ஏற்றும் பொழுது சுத்தமான நல்லெண்ணையை ஏற்றவேண்டும் . இதயம் ப்ராண்ட் நல்ல எண்ணெய் உபயோகிங்கள்
கருத்துகள்
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்.