ஆட்டுக்கால் சூப்


தேவையானப் பொருட்கள்
  • ஆட்டுக்கால்-நான்கு
  • வெங்காயம்-இரண்டு
  • இஞ்சி-ஒரு துண்டு
  • பூண்டு-நான்கு பற்கள்
  • தக்காளி-இரண்டு
  • மிளகு-ஒரு தேக்கரண்டி
  • பச்சைமிளகாய்-நான்கு
  • காய்ந்த மிளகாய்-இரண்டு
  • கறிவேப்பிலை-ஒரு கொத்து
  • கொத்தமல்லி-ஒரு பிடி
  • மஞ்சத்தூள்-ஒரு தேக்கரண்டி
  • தனியாத்தூள்-ஒரு தேக்கரண்டி
  • உப்புத்தூள்-இரண்டு தேக்கரண்டி
  • சோம்பு-ஒரு தேக்கரண்டி
  • பட்டை,கிராம்பு,ஏலக்காய்-தலா இரண்டு
செய்முறை
  • ஆட்டுக்காலை இடுக்கியால் பிடித்துக் கொண்டு ஒவ்வொன்றாக அடுப்பில் வாட்டி தீய்த்து வைத்துக் கொள்ளவும்.
  • சூடு ஆருவதற்க்கு முன்பாக கத்தியை கொண்டு மேல்பாகத்தை சுரண்டி எடுத்து கழுவி வேண்டிய அளவு துண்டுகள் போட்டு வைத்துக் கொள்ளவும்
  • இதனுடன்நசுக்கிய இஞ்சிபூண்டுமிளகுநறுக்கிய பாதி வெங்காயம். பச்சைமிளகாய் ,தக்காளி ,கொத்தமல்லிமற்றும் மஞ்சத்தூள்தனியாத்தூள்உப்புத்தூளை போட்டு இரண்டு லிட்டர் தண்ணீரை ஊற்றி வேகவைக்கவும்.
  • நன்கு வெந்து குழம்பானவுடன் சட்டியில் எண்ணெயை காயவைத்து வாசனைபொருட்களை போட்டு பிறகுகாய்ந்தமிளகாய்,மீதம்முள்ள வெங்காயம்,கறிவேப்பிலை போட்டு பொன்னிறமாக வறுக்கவும்.
  • இதை சூப்பில் ஊற்றி நன்கு கலந்து மூடி போட்டு அடுப்பின் அனலை குறைத்து விடவும்.
  • அரைமணி நேரம் கழித்து நன்கு கலக்கிவிட்டு இறக்கி விடவும்.
  • கோப்பைகளில் ஊற்றி மிதமான சூட்டில் பரிமாறவும்.அல்லது ஆப்பத்திற்கு பக்க உண்வாக பரிமாறவும்.

கருத்துகள்