சமையலறை டவல் என்பது, சமையலறையில் அதிகமாக பயன்படுத்தும் பொருட்களில் மிகவும் முக்கியமானது. எளிதில் அசுத்தமடைந்து, கெட்ட நாற்றத்தை அடைவதும் இதுவே ஆகும். சமையலறை டவல்களை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்காவிடில் பல ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படும்
.
எனவே சமையலறை டவல்களை சுத்தமாக பராமரித்து, அதே நேரத்தில் உங்கள் வீட்டிற்கு வருபவர்களை அசத்துவதற்கான சில டிப்ஸ்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
1. முதலாவதாக, நீங்கள் சமையலறை டவலை சுத்தப்படுத்துவதற்கு நல்ல தரமான சலவைத் தூளை உபயோகிக்க வேண்டும். இதை நீங்கள் முக்கியமாக நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் சில நேரங்களில், அவற்றை தயாரிக்கும் போது ஏற்படும் பாதிப்பால் சில வேதிப்பொருள் கசடுகளும், நுண்கிருமிகளும் சலவைத் தூளில் கலந்து விட வாய்ப்பு உள்ளது.
2. சமையலறை டவல்களை சுத்தப்படுத்துவதற்கு, நுண்ணுயிர்களை கொல்லும் திறன் உள்ள டிடர்ஜன்ட்களை உபயோகிக்க வேண்டும். இவை பூஞ்சைகளின் உருவாக்கத்தை தடை செய்து, டவலில் உள்ள கெட்ட நாற்றத்தையும் வெளியேற்றுகிறது.
3. சமையலறை டவலை சுத்தப்படுத்துவதற்கு நீங்கள், டவலை அலசி அதை 30 நொடிகள் மைக்ரோ அலைகளில் வைக்க வேண்டும். இதனால் அதில் உள்ள பாக்டிரியாக்கள் அழிக்கப் படும்.
4. சமையலறை டவலை துவைத்த பின் நன்கு உலர வைக்க வேண்டும். அப்படியே நீரோடு விட்டு விடக் கூடாது. இல்லாவிடில், கிருமிகள் மீண்டும் அவற்றில் பல்கி பெருகி விடும்.
5. பொதுவாக வெண்ணிற 100%காட்டன் டவல்களை உபயோகிக்க வேண்டும். சிலர் அவை விரைவில் அழுக்காகி விடும் என நினைப்பர். மேலும் அதில் உள்ள கறை, தெளிவாக தெரியும். ஆனால் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். வெண்மையை எளிதில், வெளுத்து பளீச்சென்று ஆக்கி விடலாம். இதனால் எளிதில் டவலை சுத்தப்படுத்தலாம். வண்ணத் துணிகளைப் போல, கடுமையான சலவைக்கு பின், இதில் சாயம் போகாது.
6. சமயலறையில் பயன்படுத்தும் துண்டை சுடு தண்ணீரால் சுத்தம் செய்வது என்பது கட்டாயமான ஒன்று. இதற்கு பிறகு நீங்கள் ப்ளீச்சை உபயோகப்படுத்தலாம், இதிலிருந்து வரும் கெட்ட மனத்தையும் போக்கி மற்றும் புதிய வாசனையையும் அது உங்களுக்கு தரும். வினிகர் அல்லது பேக்கிங் சோடா போன்றவற்றை இதற்கு மாற்றாக உபயோகிக்கலாம். ஆனால் இதை சேர்த்து உபயோகிக்க கூடாது என்று நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
7. சமயலறையில் பயன்படுத்தும் துண்டை துவைப்பதற்கு துணி மென்மையாக்கிகளை உபயோகிக்கக் கூடாது, இதை நீங்கள் எப்படி சோதித்து இருந்தாலும், இதை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. இதை சேர்ப்பதன் மூலம் தேவை இல்லாத ரசயானத்தின் மேல் பூச்சின் மூலம் துண்டின் உறிஞ்சும் தன்மையை குறைக்கிறது.
8. சமயலறையில் பயன்படுத்தும் துண்டை துவைப்பதற்கு நீங்கள் செய்ய வேண்டிய மற்ற விஷயங்கள் என்னவென்றால், நீங்கள் நல்ல ஸ்பாட் அல்லது கறை தூய்மையாக்கியை உபயோகிக்கலாம். நீங்கள் விரும்பிய இடத்தில் இதை போட்டு விட்டு, மற்றும் சில மணி நேரத்திற்கு அதை விட்டு விட்டு அதை கழுவ மற்றும் துவைப்பதற்கு முன் 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
9. உங்கள் சமையலறை துண்டு மிகவும் அழுக்காக இருந்தால், அதை ஒரு இரவு முழுவதும் சுடு தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். நீங்கள் ப்ளீச்சை பயன்படுத்துவதின் மூலம் வண்ணங்களை பாதுகாக்கலாம். இந்த வழியின் மூலம் அனைத்து கறைகளையும் நீக்கும் மற்றும் துணி பளபளப்பாகவும் மற்றும் நல்ல நறுமணத்துடனும் காணப்படும்.
10. நீங்கள் மேலும் ப்ளீச்சை கரைத்து உபயோகிக்கலாம் மற்றும் சோடியம் பை கார்பனேட்டில் இரவு முழுவதும் துணியை உறவைக்கவும். இந்த சேர்க்கை மனம் சுற்றி இருக்கும் காற்றோட்ட பகுதியில் கெட்ட வாசனையை ஏற்படுத்துகிறது. பிறகு இதை இயந்திரத்தில் துவைத்து, காய்வதற்காக துணியை தொங்க விடவேண்டும். இதற்கு பிறகு உங்கள் சமையலறை துண்டு நல்ல மனத்துடன் காணப்படும்.
உங்கள் சமையலறை துண்டை தினமும் துவைக்க வேண்டும் மற்றும் அதை இரவு முழுவதும் காய வைக்க வேண்டும். இது கண்டிப்பாக நுண்ணிய உயிரினங்களையும் மற்றும் வைரஸ்களையும் தள்ளிவைக்க உதவுகிறது, மற்றும் இதன் மூலம் துண்டை ஆரோக்கியமானதாகவும் மற்றும் சுத்தமானதாகவும் தினமும் வைக்க உதவுகிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்.