தேவையானவை:
கன்டென்ஸ்டு மில்க் (கடைகளில் கிடைக்கும்) – 1 கப்,
பனீர் – கால் கிலோ,
பால் – அரை கப்,
கார்ன்ஃபிளார் – 1 டேபிள் ஸ்பூன்,
பால் பவுடர் – 2 டேபிள்ஸ்பூன்,
சீவிய பிஸ்தா – 2 டீஸ்பூன்,
ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை.
செய்முறை:
பனீரை நன்கு துருவிக் கொள்ளுங்கள். துருவிய பனீருடன் பால், கன்டென்ஸ்டு மில்க், பால் பவுடர், கார்ன்ஃபிளார் சேர்த்து, அடுப்பில்வைத்து கிளறுங்கள்.
நன்கு திரண்டு வரும்வரையில் கிளறி, தட்டில் கொட்டி, சமப்படுத்துங்கள்.அதன்மீது சீவிய பிஸ்தா, ஏலக்காய்த்தூள் தூவி, வில்லைகளாக வெட்டிப்பரிமாறுங்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்.