தேவையானவை
பால்-8 கப்
குங்குமப்பூ-1 சிட்டிகை
சர்க்கரை-2 கப்
ஊறவைத்த முந்திரி -10
தேங்காய்த் துருவல் -1 கப்
நெய்-4 டீஸ்பூன்
ஏலக்காய்த் தூள்-சிறிதளவு
செய்முறை
அடி கனமான பாத்திரத்தில் பாலை விட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கிளறிக் கொண்டே இருக்கவும்.
பால் பாதியாகும் அளவுக்குச் சுண்டக் காய்ச்சவும். முந்திரி, தேங்காய்த் துருவலைச் சேர்த்து அரைத்துக் காய்ச்சிய பாலுடன் கலந்து மீண்டும் பாதியாக வந்ததும் சர்க்கரை சேர்த்து கெட்டியாகக் கிளறவும். ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ போட்டு, நெய் விட்டு சிறிது நேரம் கிளறி இறக்கவும்.
வழக்கமாகச் செய்யும் பால்கோவாவை விட இது அதிகச் சுவையோடு இருக்கும்.
கருத்துகள்
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்.