ஆட்டுக் குடல் குழம்பு

mutton kudal kulambu
  • குடல் – ஒன்று
  • வெங்காயம் – 100 கிராம்
  • தக்காளி – 3
  • பச்சைமிளகாய் – 4
  • பூண்டு – 8 பல்
  • இஞ்சி – அரை இன்ச் அளவு
  • சோம்பு – ஒரு தேக்கரண்டி
  • சீரகம் – ஒரு தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
  • மிளகாய்ப்பொடி – 3 தேக்கரண்டி
  • மல்லிப்பொடி – 4 தேக்கரண்டி
  • தேங்காய் – அரை மூடி
  • புளி – பாக்களவு
  • எண்ணெய் – 2 தேக்கரண்டி
  • உப்பு – தேவையான அளவு
  • பட்டை – ஒன்று
  • கிராம்பு – ஒன்று
  • இலை – சிறிது
  • கறிவேப்பிலை, மல்லித்தழை – சிறிது
  • குடலை நன்கு கழுவி நறுக்கி கொள்ள வேண்டும். ஒரு அடிகனமான பாத்திரத்தில் குடலைப்போட்டு வதக்கவும். தண்ணீர் விட்டு வரும்.
  • சுருள வதங்கியவுடன் தண்ணீர் ஊற்றி வேகவிடவும். நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் போட்டு குக்கரிலும் வைக்கலாம்.
  • சோம்பு, சீரகம் அரைத்து அதனுடன் பூண்டு, இஞ்சி, 8 வெங்காயம் போட்டு அரைத்து குடலில் போட்டு, மஞ்சள் தூள், மிளகாய்ப்பொடி, மல்லிப்பொடி சேர்த்து தேவையான தண்ணீர் ஊற்றி வேகவிடவும்.
  • நன்கு வெந்தவுடன் ஒரு கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க உள்ளவற்றை தாளித்து 4 நறுக்கிய வெங்காயம் கறிவேப்பிலை போட்டு வதக்கி குழம்பில் போட்டு, புளியை ஊற்றி கொதித்தவுடன் தேங்காயை அரைத்து ஊற்றி வற்றியவுடன் இறக்கவும்

கருத்துகள்