கேட்ஜெட் : ஆப்பிள் ஐபோன் 6 & 6+


வருடந்தோறும் செப்டம்பர் 9-ம் தேதி சில புதிய தயாரிப்புகளை வெளியிடுகிற ஆப்பிள் நிறுவனம், இந்த ஆண்டு ஆப்பிள் ஐபோன் 6 மற்றும் 6+ என இரு ஐபோன்களை வெளியிட்டது.

ஐபோன் 6 மற்றும் 6+ ஆகியவற்றுக்கு திரை அளவு முறையே 4.7 இன்ச் மற்றும் 5.5 இன்ச் என்ற அளவில் வடிவமைக்கப் பட்டுள்ளது. அதேபோல், 6.9 mm அடர்த்தியில் ஐபோன் 6 மற்றும் 7.1 mm அடர்த்தியில் ஐபோன் 6+ம் வடிவமைக்கப் பட்டுள்ளது. இதில் ரெட்டினா HD டிஸ்ப்ளே 1334×750 (~326 pixels per inch) மற்றும் 1920×1080 (401 pixels per inch) திறனுடன்  உருவாக்கப்பட்டுள்ளது.
வீடியோ பதிவில் ஒரு நொடிக்கு 240 பிரேம் என்ற அளவில் முழு நீள HD வீடியோவை பதிவு செய்யலாம். ஆப்பிள் A8-Dual-core 2 GHz பிராசஸரைக் கொண்டு இயங்கும். மேலும், இதன் இன்டர்னல் மெமரி 16 GB-யில் தொடங்கி, 128 GB என்ற அளவில் வெளியிட்டுள்ளது. இதன் கேமரா  நவீன கேமராக்களில் உள்ள டிஎஸ்எல்ஆர் தொழில்நுட்பத்துக்கு இணையான தரத்தில் புகைப்படங்களைத் தரக்கூடியது. இதில் ஆப்பிள் நிறுவனம் ஐஓஎஸ் 8ஐ ஆபரேட்டிங் சிஸ்டமாகப் பயன்படுத்தியுள்ளது.
இன்டர்னல் மெமரியைப் பொறுத்து இதன் விலை மாறுபடும். ஐபோன் 6-ன் விலை  ரூ.40,000 – 50,000 என்ற அளவிலும், ஐபோன் 6+ன் விலை ரூ.45,000- 60,000 என்கிற அளவில் இருக்கும் என்கிறார்கள்.  செப்டம்பர் 12-ம் தேதி முதல் விற்பனைக்கான முன்பதிவு உலக அளவில் ஆரம்பமாகிறது. இந்தியாவில் இந்த ஐபோன்கள் வரும் அக்டோபர் 17-ம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என ஆப்பிள் அறிவித்துள்ளது. மற்ற ஐபோன்களைக் காட்டிலும் இவை 84 மடங்கு கிராபிக்ஸ் திறனும், 50 மடங்கு பேட்டரி திறனும் கொண்டதாக இருக்குமாம்.

கருத்துகள்