விண்டோஸ் 10-ஐ அறிமுகம் செய்தது மைக்ரோசாப்ட்

மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது விண்டோஸ் இயங்குதளத்தின் புதிய பதிப்பாக விண்டோஸ் 10-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. கணினி, டேப்லட், மொபைல் ஆகிய அனைத்துக்கும் இனி ஒரே இயங்குதளமாக விண்டோஸ் டென் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
windows 10
தற்போதைய விண்டோஸ் 8.1 பதிப்பின் மேம்படுத்தளாக  விண்டோஸ் 9-ஐ நேற்று வெளியிடப்படும் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் மைக்ரோசாப்ட் நிறுவனம் புதிய இயங்குதளத்திற்கு விண்டோஸ் 10 என்று பெயரிட்டுள்ளது.
இதற்கு காரணம், இந்த புதிய அப்டேட் முன்னெப்போதும் இல்லாத வகையில் நவீன வசதிகள் இருக்கும் என்பதால் விண்டோஸ் 9-ஐ புறக்கணித்துவிட்டு விண்டோஸ் 10 என பெயரிட்டுள்ளது.
புதிய வசதிகள்:
Start Menu:
windows 10 start menu
விண்டோஸ் 7 போன்ற பழைய விண்டோஸில் உள்ளது போல ஸ்டார்ட் மெனுவை மீண்டும் கொண்டு வந்துள்ளது. மேலும் நம் விருப்பப்படி மாற்றியமைக்கும் வசதியும் உள்ளது.
Apps Window:

windows 10 App
விண்டோஸ் ஸ்டோர் அப்ளிகேசன்கள் இனி சாதாரணமான டெஸ்க்டாப் அப்ளிகேசன்கள் செயல்படுவது போல தனி விண்டோவில் செயல்படும்.
ஒரே சமயத்தில் நான்கு அப்ளிகேசன்கள்:
windows 10 multi screen
ஒரே சமயத்தில் நான்கு அப்ளிகேசன்களை எவ்வித தடையுமின்றி பயன்படுத்தலாம்.
Task View:
windows 10 task view
நாம் திறந்திருக்கும் அனைத்து கோப்புகள், அப்ளிகேசன்களை பார்க்க புதிய டாஸ்க் வீவ்.
மேலும் பல வசதிகளுடன் விண்டோஸ் 10 இயங்குதளம் 2015-ஆம் வருடம் வெளியிடப்படுகிறது. விண்டோஸ் 8 பயனாளர்களுக்கு இது இலவசமாக கிடைக்குமா? அல்லது அனைவரும் பணம் கட்டி இதனை பெற வேண்டுமா? என்பதை மைக்ரோசாப்ட் தெரிவிக்கவில்லை.
இதன் சோதனைப்பதிப்பை http://preview.windows.com/ என்ற முகவரிக்கு சென்று பதிவிறக்கம் செய்யலாம். இது சோதனை பதிப்பு என்பதால் பிரச்சனைகள், பிழைகள் இருக்கலாம்.

கருத்துகள்