சர்தார்ஜி நகைச்சுவை.

சர்தார் தன் பழைய நண்பன் ஒருவனை தற்செயலாக சந்தித்தார்..அவனோ குடும்பத்தில் ப்ரச்னை என்று புலம்பினான்..
சர்தார் சொன்னார்..நண்பா ...இதெல்லாம் பிரச்னையே இல்லே... என் குடும்ப சங்கதியக் கேட்டா நீ மயங்கி விழுந்துடுவே..!
நான் ஒரு விதவையைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.. அவளுக்கு வயது வந்த மகள் இருந்தா.. அவள எங்கப்பா கல்யாணம் கட்டிக்கிட்டார்..!
அப்போ என் மகள் எனக்கு அம்மா ஆயிட்டா.. ஆனா ஒரு வகையிலே என் அப்பா எனக்கு மருமகனாயிட்டார்.. அதே சமயத்திலே என் மனைவி எங்கப்பாவுக்கு, அதாவது தன் மாமனாருக்கு மாமியாராயிட்டா..!
கொஞ்ச காலம் போயி என் மகள், அதாவது சித்தி ஒரு பையனுக்கு அம்மாவானாங்க..!எஅந்தப் பொடியன் என்னோட தம்பி முறை.. ஏன்னா அவன் எங்கப்பாவோட புள்ள இல்லியா..?
ஆனா அதே சமயத்திலே என் மனைவியின் மகளின் மகன்.. அதாவது என் மனைவியின் பேரன்..!
ஒரு வகையிலே என் தம்பியோட தாத்தா நான்..!அப்புறம் கொஞ்ச நாள் ஒரு பிரச்னையும் இல்லே..எனக்கும் என் மனைவிக்கும் ஒரு பிள்ளை பிறக்கும் வரை...
இப்போ என் மகனின் சகோதரி.. அதாவது என் சித்தி..ஒரு வகையிலே அவனுக்கு பாட்டி.. இல்லியா.? இன்னொரு குழப்பம் வேறே..
என் அப்பா என் மகனுக்கு மச்சினன் ஆயிட்டார்..!ஏன்னா.. என் மகனின் சகோதரியை.. அதாவது என் மனைவியின் முன்னாள் மகளும் என் சித்தியுமான அவங்க என் மகனுக்கு அக்கா தானே..?அப்படிப் பார்த்தா, என் மகனின் அக்காவான என் சித்தி அவங்க மருமகனும், இன்னொரு வகையிலே மாமனாருமான எனக்கு பிறந்த மகனுக்கு மச்சினிஆயிட்டாங்க..!
இப்போ என்னாச்சுன்னா, எனக்கு ஒரு மகன் இருக்கான்..எங்க அப்பாவுக்கும் ஒரு மகன் பிறந்திருக்கான்.. அவங்க ரெண்டு பேரும் மாமனும் மருமகனும்.. ! இல்லியா.?
அதாவது எனக்கு சித்தியும் மகளும் மருமகளுமான, என் மனைவிக்கு மகளும் மாமியாருமான, என் தம்பிக்கு அம்மாவும் எனக்கு மகளுமான, என் மனைவியின் மகள் எனக்குப் பிறந்த மகனுக்கு என்ன முறை..?அத்தையா..? பாட்டியா..? அக்காவா..?

.........................................................................................

ஒரு இந்தியன், ஒரு சீனன், ஒரு அமெரிக்கன் மூவரும் தங்கள் நாட்டு மருத்துவ முறைதான் உயர்ந்தது என்று வாதிட்டார்கள்.அமெரிக்கன் சொன்னான்.." ஒரு ஆள் கால்லே அடிபட்டு பெரிய காயத்தோட தூக்கிட்டு வந்தாங்க.. ஒரே ஒரு ஊசி தான்..உடனே எழுந்து ஓடினான் ..தெரியுமா..?
சீனன் கூறினான்.. ஒரு ஆளுக்கு கை, கால் ரெண்டு இடத்திலேயும் எலும்பு முறிஞ்சுடுச்சு..அக்கு-பங்சர் முறையிலே வைத்தியம் பார்த்ததும் அவன் டான்ஸ் ஆடினான்..இதுக்கு என்ன சொல்றீங்க..?இந்தியன் சொன்னான்.. இது என்ன பிரமாதம்..? எங்க மாமா மாடு ஓட்டிக்கிட்டு போனப்போ ரயில் மோதிடுச்சு,, மாடும் எங்க மாமாவும் ரெண்டா போயிட்டாங்க..
உடனே மாமாவோட மேல் பகுதியையும், மாட்டோட பின் பகுதியையும் சேர்த்து தைச்சிட்டாங்க..இப்போ மாமா நல்லா நடக்கறார்..அது மட்டுமில்லே..தினம் ரெண்டு லிட்டர் பாலும் தர்றார் !!!!.

.........................................................................................




கழுதை தொலைந்ததற்கு கடவுளுக்கு நன்றி சொன்னான் ஒருவ‌ன்
ஏன்?
ந‌ல்ல வேளை அதில் நான் சவா‌ரி செய்யவில்லை இ‌ல்லை‌ன்னா நானும் தொலைந்து போயிருப்பேனே!’

கருத்துகள்