நீர் பருகும் முறை


நீர் பருகும் முறை

நீர் பருகும் முறைகள்

எந்த நீரானாலும் சரி, அதைக்காய்ச்சி சூட்டுடனோ அல்லது ஆறவைத்து குடிக்க வேண்டும். காய்ச்சி குளிர வைத்த தண்ணீரை எந்த உடல் நிலையிலும் குடிக்கவும்.
மார்பில் கபம், சளி, வயிற்றில் வாய்வு, அஜீரணம் இவற்றுக்கு சூடான நீரைக்குடிப்பது நல்லது. ஒரு பங்கு ஜலத்தை கால்பங்காக காய்ச்சி, குறுக்கி குடித்தால் வாயுநோய்கள் தணியும். அரைப் பங்காக காய்ச்சி குடிப்பது பித்த நோய்களுக்கு நல்லது.
நீரைக்காய்ச்சும் போது நுரையோ அழுக்கோ மிதந்தால் அந்த நீரை உபயோகிக்க கூடாது.
பகலில் காய்ச்சிய நீரை இரவில் உபயோகிக்க கூடாது. அதே போல இரவில் காய்ச்சிய நீரை பகலில் உபயோகப்படுத்தக் கூடாது. காய்ச்சிய நீரை அதிக நேரம் வைத்தால் அது 'கனமாகி' ஜீரணமாகாது. ஆறிய வெந்நீரை மறுபடியும் காய்ச்சி உபயோகப்படுத்தக் கூடாது. தேவைக்கேற்ப அவ்வப்போது காய்ச்சி குடிக்கலாம்.
காய்ச்சிய நீரை டம்ளர்களில் போட்டு 'டீ' யை ஆற்றுவது போல் ஆற்றக்கூடாது. தானாக ஆற விட வேண்டும்.
மூர்ச்சை, மயக்கம், தலைசுற்றல், களைப்பு, வாந்தி, படபடப்பு இவற்றுக்கு குளிர்ந்த நீர் நல்லது. சளி, கபம், அஜீரணம், விக்கல், ஜுரம் இவைகளில் வெந்நீர் உசிதம்.
நீரை கொஞ்சம் கொஞ்சமாக குடிக்க வேண்டும். பசி எடுக்கும் போது நீரைக் குடிக்கக் கூடாது.
சாப்பிடும் முன் நீர் குடித்தால் உடல் இளைக்கும். உணவின் நடுவே நீர் குடித்தால் நல்ல ஜீரணமாகும். சாப்பாட்டின் முடிவில் நீர் குடிக்க உடல் பெருக்கும், ஜீரணம் தாமதமாகும்.
இரவு படுக்கு முன் வெந்நீழ் உட்கொள்ளலாம். காலையில் வெறும் வயிற்றில் குளிர்ந்த நீர் பருகலாம். மலபந்தம் உண்டாகாது.
சரகர் களைப்பை நீக்கும் பொருட்களில் சிறந்ததாக "நல்ல குடிநீரை" சொல்கிறார்.

கருத்துகள்