கடினமாக உழைக்கும் ஒருவன் நிறைய சம்பாதித்து பணம் சேர்த்து வந்தான்...அவனுக்கு பணம் சேர்ப்பது கொள்ளை பிரியம்..
ஒரு நாள் அவன் மனைவியிடம் சொன்னான், நான் இறந்த பிறகு என்னோடு வைத்து நான் சேர்த்து வைத்த சொத்துகளையும் புதைத்து விடுனு...மனைவியும் கணவனுக்கு சத்தியம் செய்து கொடுத்தாள்..
சிறிது நாளில் கணவன் இறந்து போகிறான். மனைவி தன் தோழியிடம் கணவனுக்கு தான் செய்து கொடுத்த சத்தியம் பற்றி கூறியிருந்தாள்..
தோழிக்கு இப்போது ஒரே ஆவல்..இவள் என்ன செய்ய போகிறாள் என்று.
கணவனை அடக்கம் செய்யும் பெட்டியில் ஒரு சின்ன பெட்டி ஒன்றை வைத்து் விட்டு வந்தாள் மனைவி..
தோழிக்கு ஆச்சரியம் கேட்டாள், “கண்டிப்பா அத்தனை சொத்துக்களையும் நீ் வீணடித்திருக்க மாட்டாய், ஆனால் என்ன செய்தாய்”....
என் கணவனுக்கு செய்து கொடுத்த சத்தியதை நான் மீற மாட்டேன்.
சொத்துக்களை என் பேங்க் அக்கௌண்டில் போட்டு விட்டு, பிளாங்க் செக் ஒன்றில் கையெழுத்திட்டு அவர் ஆசைபடி அவரோடு சேர்த்து விட்டேன்..........அவரால முடிஞ்சா பணம் எடுத்து இஷ்டம் போல செலவு செய்து கொள்ளட்டும் என்றாள்....
நன்றி : அறிந்துகொள்வோம்
கருத்துகள்
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்.