முல்லா கதைகள் - கேள்விக்குள் பதில் அடக்கம்


 















துருக்கி நாட்டுப் பாணியிலமைந்த குளியலறையில் அரசனும், முல்லாவும் உட்கார்ந்திருந்தார்கள். அப்போது அரசர் முல்லாவிடம்,
"ஓர் உண்மையைச் சொல்லுங்கள்?" என்றார்
"நான் எப்போதும் உண்மையையே பேசுவேன், மேன்மை தங்கிய அரசே" என்றார் முல்லா.
"என் மதிப்பு என்ன?" என்று கேட்டார் முல்லா.
"ஐந்து தங்கக் கட்டிகள்."
அதற்கு, "எனது குளியல் உடைகளைச் சுமந்து வரும் பெட்டியின் வார்ப்பட்டை அந்த மதிப்புதான்" என்று அரசர் கோபமுற்றார்.
"நீங்கள் விலை மதிப்பில்லாதவர்"' என்றார் முல்லா.
"நீங்கள் ‘மதிப்பு’ பற்றிக் கேட்டபோது நான் கேள்விக்குத் தகுந்த மாதிரி பதிலளிக்க நிர்ப்பந்திக்கப்பட்டேன். பணத்தை அளவுகோலாகக் கொண்டு நீங்கள் பேசுவதாயிருந்தால் நான் வார்ப்பட்டையின் வெளி மதிப்பைச் சொல்வேன். நீங்கள் அக மதிப்பைப் பேசுவதாயிருந்தால், அதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது" என்றார் முல்லா.

கருத்துகள்