"முஜே மாலும் நஹி"

ஒரு வெளிநாட்டுகாரர் இந்தியா வந்தார். தாஜ்மகாலை பார்த்து அதிசயப்பட்டு பக்கத்தில் இருந்த ஒரு ஹிந்திகாரரிடம் இதை யார் கட்டியது என்று கேட்டார். அந்த ஹிந்திகாரர் "எனக்கு தெரியாது" என்பதை "முஜே மாலும் நஹி" என்று கூறினார். வெளிநாட்டுகாரர் " இந்த முஜே மாலும் நஹி என்பவர் பெரிய ஆள் போல் தெரிகிறது" என்று நினைத்துக் கொண்டே ... குதுப்மினாரை பார்க்கச் சென்றார். 


அங்கே நின்ற ஹிந்தி காரரை பார்த்து "இதை கட்டியது யார்" என்றார். அவரோ "முஜே மாலும் நஹி" என சொன்னார். அங்கிருந்த ஒரு இருபது மாடி கட்டிடத்தை காட்டி அதைப் பற்றி கேட்டாலும் அதே " முஜே மாலும் நஹி" வியந்துபோன வெளிநாட்டுக்காரோ, "முஜே மாலும் நஹி" என்பவர் பெரிய பணக்காரர் போல் தெரிகிறது என்று அவருடைய டயரியில் எழுதினார். பிரிதொரு நாளில் ஒரு இறுதி ஊர்வலம் போனது "இறந்தது யார் என்று அந்த வெளி நாட்டுக்காரர் கேட்க, மீண்டும் " முஜே மாலும் நஹி". அட ...இவ்வளவு பெரிய ஆள் இறந்த போதும் கூட்டமே இல்லையே என்று வியந்தபடியே தானும் ஊர்வலத்தில் கலந்து கொண்டார்.

கருத்துகள்